காலை உணவிற்கு 20 நிமிடத்தில் சுவையான கேரட் சேமியா உதிரி உதிரியாக இப்படி செய்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!!!
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது கேரட் சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவ
உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது கேரட் சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது இரவு நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. இதில் நாம் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி போன்ற பல விதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். நம்மில் பெரும்பாலோனருக்கு உப்புமா என்றாலே முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் உப்புமாவானது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகை ஆகும்.
உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து சூடாக ஏதாவது செய்து தர கேட்பார்கள். அப்போது சேமியாவில் கேரட் சேர்த்து உப்புமா செய்யுங்கள். பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் கேரட் மற்றும் மசாலா சேர்த்து அட்டகாசமான சுவையில் சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தக்காளி சாதத்தை மிஞ்சும் சேமியா தக்காளிபாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி தான்!