சேமியா உப்புமா என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வேண்டாம் என்ற வார்த்தையை தான் முதலில் சொல்லுவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி சேமியா தக்காளிபாத் செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி விரும்பி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அப்போது இந்த சேமியாவை செய்ய ரொம்பவும் கஷ்டமாக இருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். சுலபமாக இந்த டிஃபன் ரெடி செய்து விடலாம்.
எப்போதும் சேமியா என்றாலே உப்புமா செய்து கொடுத்தால் பலரும் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமாக நல்ல மணமுடன், சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் எல்லோருமே சப்பு கொட்டி சாப்பிட்டு விடுவார்கள்.சேமியா தக்காளிபாத் இது போல் ஒரு முறை செய்து பாருங்கள், ரொம்பவே ருசியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வாயில் சுலபமான காலை உணவு.
குழந்தைகள் என்றாலே அவர்களின் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். அப்படி குழந்தைகள் சாப்பிடும் விஷயத்தில் மிகவும் அடம்பிடிப்பார்கள். இதை சாப்பிடுவது நல்லது அல்ல என்று நாம் எதை சொல்கிறோமோ அதை தான் அவர்கள் அடம்பிடித்து கேட்பார்கள். பல குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடும் ஒரு உணவு வகை நூடுல்ஸ். ஆனால் இந்த நூடுல்ஸ் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் அவை உடல்நல பிரச்சனையை கொடுத்து விடுகிறது. எனவே பெற்றோர்கள் இதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்கள் நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் நேரத்தில் இப்படி வீட்டில் இருக்கும் சேமியா வைத்து சுவையான சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி இந்த சுவையான சேமியா தக்காளிபாத் சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சேமியா தக்காளிபாத் | Semolina Tomatobath Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 கப் சேமியா
- 4 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 வெங்காயம்
- கறிவேப்பிலை சிறிது
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 கைப்பிடி முந்திரி
- 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- மஞ்சள் தூள் சிறிது
- உப்பு தேவையான
தாளிக்க
- கடுகு சிறிது
- சீரகம் சிறிது
- உளுந்து சிறிது
- கடலைப்பருப்பு சிறிது
செய்முறை
- சேமியாவை ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் வறுக்கவும். 3 கப் நீரைக் கொதிக்க வைத்து சேமியாவில் ஊற்றி, உப்பு போட்டு வேக விடவும்.
- பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு தாளிக்கவும். முந்திரி சேர்த்து வறுக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும். இதில் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தூள் வாசம் போக வதக்கவும்.
- தேவையெனில் சிறிது நீர் விட்டு எண்ணெய் பிரிய கொதிக்க விடவும். பின்வேக வைத்த சேமியா சேர்த்து 3 நிமிடம் பிரட்டவும்.
- சுவையான தக்காளி சேமியா தயார்