மாலை வேளையில் நன்கு காரசாரமாக சாப்பிட விரும்பினால் இந்த சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் செய்து பாருங்கள்!!

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். பன்னீரை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? பன்னீர் வைத்து எந்த ரெசிபி செ

By Prem Kumar · 17/7/2025

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். பன்னீரை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? பன்னீர் வைத்து எந்த ரெசிபி செய்தாலும், அடுத்த நிமிடமே அனைத்தும் காலி ஆகி விடும் அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். அனைத்து வயதினரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிப்பிகளில் பன்னீரும் ஒன்று. அப்படிப்பட்ட சுவையைக் கொண்ட பன்னீர் வைத்து ஸ்பைசியான ஒரு ரெசிபி செய்யலாம் வாங்க!

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் பெப்பர் ரோஸ்ட் ஒரு நல்ல ஸ்நாக்ஸாக இருப்பதோடு, பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியையும் தணிக்கும். மேலும் இந்த பன்னீர் பெப்பர் ப்ரையை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்து கொடுக்கலாம். குறிப்பாக இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

மேலும் பன்னீரில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை. பன்னீரை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான ஆர்வம் குறையும். பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்துக்களாகும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பன்னீரை வைத்து சுவையான சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கருவேப்பிலை பன்னீர் பிரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full