- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பன்னீர் வைத்து பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு ஹை புரோட்டின் பன்னீர் வைத்து ஒரு சூப்பரான கருவேப்பிலை பன்னீர் ப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இந்த ஃப்ரை செய்றதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம். அது ரொம்பவே வாசனையா ரொம்பவே டேஸ்டா இருக்கும். சூப்பரான இந்த கருவேப்பிலை பன்னீர் பிரை ரெசிபி கண்டிப்பா எல்லாருமே செஞ்சு பார்க்க வேண்டிய ஒரு ரெசிபி.
வெஜிடபிள் ரைஸ், மஸ்ரூம் பிரியாணி, குஸ்கா இந்த மாதிரி ரெசிப்பிஸ் செய்யும் போது இந்த கருவேப்பிலை பன்னீர் ஃப்ரை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிட வாங்க. சாதத்துக்கு மட்டுமில்லாமல் இதை அப்படியே சாப்பிட எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்திருக்கும் போதும் இந்த மாதிரி அவங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. அதனால மறக்காம இந்த மாதிரி ரெசிப்பிஸ் கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
கருவேப்பிலை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பொதுவான கருவேப்பிலையை எல்லா குழம்புக்கும் சேர்த்து தாளிப்போம் ஆனால் கருவேப்பிலையை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனா அப்படி செய்யக்கூடாது கருவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும். அப்படி சாப்பிடாதவங்க கருவேப்பிலையை ஏதாவது ஒன்னுல சேர்த்து ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்தா குழந்தைகளில இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை பன்னீர் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் மிளகு சீரகம், சோம்பு, பட்டை,கிராம்பு, மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் ,5 பல் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய 5 பல் பூண்டு நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கியதும் அரைத்து வைத்த பொடியை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
பிறகு பன்னீரை சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கருவேப்பிலை பன்னீர் பிரை தயார்.






