கார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

பன்னீர் வைத்து பாலக் பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி, பன்னீர் குடைமிளகாய் தொக்கு அப்படின்னு எக்கச்சக்கமான வெரைட்டிஸ் பண்ணலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு கார்லிக் பன்னீர் ரோஸ்ட் பாக்க போறோம். இந்த பன்னீர் ரோஸ்ட் சாப்பிடுவதற்கு வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாப்டா அவ்வளவு ருசியாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த பன்னீர் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதை ஸ்நாக்ஸாவும் சாப்பிடலாம் சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். இந்த பன்னீர் ரோஸ்ட் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

ஏதாவது சிம்பிளா நெய் சாதம், மிளகு சாதம், சீரக சாதம்னு செஞ்சு அது கூட சைடு டிஷ்ஷா இந்த கார்லிக் பன்னீர் ரோஸ்ட் வச்சு கொடுத்தீங்கன்னா டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். அந்த அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்ட்ருப்பாங்க. உங்களுக்கு பெருசா சைடிஸ் செய்வதற்கு விருப்பம் இல்லனா இந்த ரொம்ப ரொம்ப சிம்பிளான சைட் டிஷ்ஷா செஞ்சு பாருங்க. இந்த பன்னீர் ரோஸ்ட் சைடிஷா மட்டும் இல்லாம ஈவினிங் ஸ்நாக்ஸா கூட சாப்பிடலாம் பொதுவாவே பன்னீரில் நிறைய புரத சத்துக்கள் இருக்கு. இந்த புரதச் சத்துக்களை குழந்தைகளுக்கு பெரியவங்களுக்கு எல்லாருக்குமே கொடுக்கணும். அதனால கண்டிப்பா பன்னீர் அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க.

- Advertisement -

ஒரே மாதிரியான பன்னீர் ரெசிப்பிஸ் செஞ்சு போர் அடிச்சு போச்சு அப்படின்னா இந்த மாதிரியான ஒரு சூப்பரான கார்லிக் பன்னீர் ரோஸ்ட் செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப அருமையான ஒரு சைடிஷா இருக்கும். இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைக்க போறோம் எதுவுமே ரெடிமேட் பொடியா சேர்க்காம எல்லாத்தையும் மறைச்சு சேர்க்கிறதால இதோட வாசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஒரு தடவை செஞ்சீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த கார்லிக் பன்னீர் ரோஸ்ட் செய்றதுக்கு பன்னீரை நல்லா கட் பண்ணனும் வீட்ல செஞ்ச பன்னீர் அப்படின்னா இன்னும் சுவை கூடுதலாக இருக்கும் வீட்டில் பன்னீர் இல்லனா கடைகளிலும் வாங்கி செய்யலாம் இப்ப வாங்க இந்த சுவையான கார்லிக் பன்னீர் ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கார்லிக் பன்னீர் ரோஸ்ட் | Garlic Paneer Roast Recipe In Tamil

பன்னீர் வைத்து பாலக் பன்னீர் பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி பன்னீர் குடைமிளகாய் தொக்கு அப்படின்னு எக்கச்சக்கமான வெரைட்டிஸ் பண்ணலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு கார்லிக் பன்னீர் ரோஸ்ட் பாக்க போறோம். இந்த பன்னீர் ரோஸ்ட் சாப்பிடுவதற்கு வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாப்டா அவ்வளவு ருசியாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த பன்னீர் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதை ஸ்நாக்ஸாவும் சாப்பிடலாம் சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். இந்த பன்னீர் ரோஸ்ட் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Keyword: Garlic Paneer Roast
Yield: 4 People
Calories: 133kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கி பன்னீர்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • பட்டர் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை நீளவாக்கில் ஸ்லைஸ் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டு இஞ்சி சீரகம், மிளகு காய்ந்த மிளகாய் உப்பு எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எடுத்து மசாலாவில் நன்றாக முக்கி எடுத்து வைக்கவும்.

Nutrition

Serving: 450g | Calories: 133kcal | Carbohydrates: 3g | Protein: 16g | Fat: 2.7g | Sodium: 51mg | Potassium: 136mg | Fiber: 18g | Vitamin C: 181mg | Calcium: 29mg | Iron: 16mg

இதனையும் படியுங்கள் : பன்னீர் பெப்பர் ப்ரை, இந்த முறையில சிம்பிளா ஒரு தடவ செஞ்சு பாருங்க!