- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரெசிபிஸ் எக்கச்சக்கமா இருக்கு. பன்னீர் பட்டர் மசாலா பன்னீர் கிரேவி ஆப்கானி பன்னீர் பன்னீர் ஸ்டஃப்டு தோசை பன்னீர் ஸ்டஃப்டு இட்லி பன்னீர் சப்பாத்தி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் ஆனா இன்னைக்கு நம்ம பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரொம்பவே சிம்பிளான ஒரு ரெசிபி தான் செய்யப் போறோம். இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்றது ரொம்ப ரொம்ப ஈசி இதுக்கு நம்ம செய்ற மசாலாவை பிரெஷா வறுத்து அரைச்சு வச்சோம் அப்படின்னா சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். ரொம்ப டேஸ்ட் ஆகவும் இருக்கும்.
உங்க வீட்ல செய்யக்கூடிய புலாவ் ஜீரா ரைஸ் ப்ரைட் ரைஸ் அப்படின்னு ரொம்பவே காரம் கம்மியா இருக்கக்கூடிய சாதத்துக்கு இந்த பன்னீர் பேப்பர் ப்ரை செஞ்சா சுவை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு பெர்பெக்ட்டான சைடிஷ் ஆகவும் இருக்கும். இந்த பெப்பர் ப்ரை செய்வதற்கு நம்ம சீரகம் மிளகு கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு எல்லாத்தையும் சேர்த்து வறுத்து அரைச்சு பொடியாக்கி அந்த பொடியை சேர்த்தோம் அப்படின்னா சுவை பல மடங்கு இருக்கும். உங்க வீட்ல பன்னீர் இருந்தா இன்னைக்கே கூட இந்த சூப்பரான பன்னீர் பெப்பர் ஃப்ரை செஞ்சு பாருங்க.
இந்த ரெசிபிக்கு வீட்லையே செஞ்ச பன்னீர் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை கொடுத்துவிடலாம். ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட நல்லா விரும்பி சாப்பிடுவாங்க பன்னீரை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான பன்னீர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இனி பன்னீர் வாங்கினால் இப்படி பன்னீர் ஃபிங்கர்ஸ் செய்து கொடுங்கள் மாலை வேளையில் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்!!!
Ingredients
Method
பன்னீரை சதுர வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக 10 நிமிடத்திற்கு வதக்கவும்.
பிறகு அதனுடன் பன்னீரை சேர்த்து நன்றாக கிளறி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் பெப்பர் ப்ரை தயார்.






