வீடே மணமணக்க கொத்தவரங்காய் சாம்பார்  ஒருமுறை இப்படி செய்வது பாருங்களேன்!

மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு சாம

By ·

மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சாம்பார்  செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

இந்த கொத்தவரங்காய் சாம்பார் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சாம்பார் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. மேலும் மக்கள் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவுகளில் இவையும் ஒன்று. இதையே சற்று ‌வித்தியாசமாக கொத்தவரங்காய் சாம்பாராகா செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். கொத்தவரங்காய் தமிழில் கொத்தவரங்கை என்று அழைக்கப்படுகிறது.

இது பொரியல், பொரிச்ச குழம்பு, உசிலி என பரவலாக தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பாணி அவியல்களிலும் சேர்க்கப்படுகிறது. இந்த கொத்தவரங்காய் சாம்பார் அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும். சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் குழந்தைகள் கூட வேணும், வேணும் என்று சாப்பிடுவார்கள். மதியம் வைத்த சாம்பார் மீதமிருந்தால், அதை இரவு நேரத்தில் இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Recipes AMP · Quick view
View full