மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.
இந்த கொத்தவரங்காய் சாம்பார் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சாம்பார் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. மேலும் மக்கள் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவுகளில் இவையும் ஒன்று. இதையே சற்று வித்தியாசமாக கொத்தவரங்காய் சாம்பாராகா செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். கொத்தவரங்காய் தமிழில் கொத்தவரங்கை என்று அழைக்கப்படுகிறது.
இது பொரியல், பொரிச்ச குழம்பு, உசிலி என பரவலாக தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பாணி அவியல்களிலும் சேர்க்கப்படுகிறது. இந்த கொத்தவரங்காய் சாம்பார் அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும். சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் குழந்தைகள் கூட வேணும், வேணும் என்று சாப்பிடுவார்கள். மதியம் வைத்த சாம்பார் மீதமிருந்தால், அதை இரவு நேரத்தில் இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
கொத்தவரங்காய் சாம்பார் | Cluster Beans Sambar In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/4 கி கொத்தவரங்காய்
- 1 கப் துவரம் பருப்பு
- 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 1/4 சாம்பார் தூள்
- உப்பு தேவையானஅளவு
- புளி எலுமிச்சைஅளவு
தாளிக்க
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 வரமிளகாய்
- 1/2 ஸ்பூன் பெருங்காய்த்தூள்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் கொத்தவரங்காயை கழுவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் துவரம் பருப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து அதில் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்தவரங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- பிறகு குக்கரை திறந்து அதில் வேக வைத்த கொத்தவரங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். மீண்டும் புளித்தண்ணீர் வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- அதன் பிறகு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
- இறுதியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் மிகவும் எளிதான, சுவையான கொத்தவரங்காய் சாம்பார் தயார்.