கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்!!

ஒரு சிலருக்கு வாங்கி கடனை சீக்கிரம் தரக்கூடிய யோகம் இருக்கும் ஒரு சிலர் கடனை வாங்க மாட்டார்கள். ஆனால் ஒரு சிலர் கடனை வாங்கிவிட்டு அதை திரும்ப தரக்கூடிய சூழல் இல்லாமல் இருப்பார்கள் கடன் கொடுத்தவர்களை பார்த்து பயந்து கொண்டே வாழ்க்கையை வாழ்வார்கள். இப்படி பெரிய கடன் பிரச்சனையில் இரு

By ·

ஒரு சிலருக்கு வாங்கி கடனை சீக்கிரம் தரக்கூடிய யோகம் இருக்கும் ஒரு சிலர் கடனை வாங்க மாட்டார்கள். ஆனால் ஒரு சிலர் கடனை வாங்கிவிட்டு அதை திரும்ப தரக்கூடிய சூழல் இல்லாமல் இருப்பார்கள் கடன் கொடுத்தவர்களை பார்த்து பயந்து கொண்டே வாழ்க்கையை வாழ்வார்கள். இப்படி பெரிய கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு நிறைய பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் பரிகாரங்கள் இருந்தாலும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி தவித்தவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

கடன் தீர்க்கும் பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் புதிய பூக்களை சுவாமிக்கு போடுங்கள். பச்சரிசியில் கொஞ்சமாக மஞ்சள் தூள், குங்குமம், நெய் விட்டு கலந்து அட்சதையை தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு வெள்ளை காகிதத்தில் மஞ்சள் பொட்டு வைத்து அந்த காகிதத்தின் மேலே நீங்கள் யாருக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பேரை எழுதி தொகையை எழுதி அந்த தட்டுக்கு கீழே வைக்க வேண்டும். பிறகு அந்த வழிபாட்டை முடித்த பிறகு அந்த பேப்பரை எடுத்து அகல் விளக்கு எரியும் நெருப்பில் எரித்து விட வேண்டும். பிறகு அந்த எரித்த சாம்பலை தண்ணீரில் கரைத்து கீழே ஊற்றி விட வேண்டும். அந்த அரிசியை எறும்புகளுக்கு உணவாக போட்டு விட வேண்டும். வடக்கு பார்த்த எரியும் தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய கடன் பிரச்சனைகளை கூறி குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை என்று இந்த பரிகாரத்தை செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். செவ்வாய் ஹோரை முடியும் நேரம் ஆன ஒரு மணி வரையில் அந்த விளக்கம் முன்பு அமர்ந்து மனமுருகி பிரார்த்தனை செய்தாலும் மிகவும் நல்லது. உங்களுடைய செல்வ வளம் உயரத் தொடங்கும் கடனை சீக்கிரம் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை நிச்சயமாக நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!

Recipes AMP · Quick view
View full