- Advertisement -
பலருக்கும் பிடித்த இந்த மீன் ஊறுகாய் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். மீனை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். மீனை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான சிக்கன் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!
- Advertisement -
என்பார்கள். இப்படி மீனை ஊறுகாய் போல செய்து வைத்தால் தின்ன தின்ன திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி அத்தகைய மகத்துவம் வாய்ந்த மற்றும் சுவை மிகுந்த மீன் ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
மீன் ஊறுகாய் | Fish Pickel Recipe in Tamil
பலருக்கும் பிடித்த இந்த மீன் ஊறுகாய் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். மீனை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். மீனை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள். இப்படி மீனை ஊறுகாய் போல செய்து வைத்தால் தின்ன தின்ன திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி அத்தகைய மகத்துவம் வாய்ந்த மற்றும் சுவை மிகுந்த மீன் ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
Yield: 4 People
Calories: 226kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 KG மீன் முள் இல்லாதது
- 125 கிராம் இஞ்சி
- 125 கிராம் பூண்டு
- 60 கிராம் கடுகு
- 1 Tbsp மஞ்சள் தூள்
- 1 Tbsp சர்க்கரை
- 400 கிராம் வினிகர்
- 2 Tbsp உப்பு
- 1 1/2 Tbsp மிளகாய் தூள்
- 60 கிராம் மிளகாய் வற்றல்
- 35 கிராம் சீரகம்
- 1/2 KG கடலை எண்ணெய்
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள முட்களை நீக்கி விட்டு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அதன் பின் நாம் வெட்டி வைத்திருக்கும் மீனில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தடவி 1 மணி நேரம் நன்கு ஊர வைக்கவும்.
- அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து பொறித்தெடுக்கவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதில் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பின் வதக்கிய ஊறுகாயை ஈரப்பதம் இல்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான மீன் ஊறுகாய் தயார்.
Nutrition
Serving: 1300G | Calories: 226kcal | Carbohydrates: 2g | Protein: 66g | Fat: 2g | Cholesterol: 4mg | Potassium: 782mg | Sugar: 0.5g | Iron: 1.5mg