மதிய உணவுக்கு ருசியான மீன் கூட்டு பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

fish poriyal
- Advertisement -

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா அப்போ இது போன்று மீன் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு தரம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
fish poriyal
Print
No ratings yet

மீன் பொரியல் | Fish Poriyal Recipe In Tamil

நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா அப்போ இது போன்று மீன் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு தரம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: fish poriyal, மீன் பொரியல்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 துண்டு பொரித்த மீன்
  • 3 தக்காளி
  • 6 வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கு
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

தாளிக்க:

  • 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு
  • 1 முழு பூண்டு
  • கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை

  • வழக்கமாக பொரிக்கும் மீனைவிட கூடுதலாக 5 நிமிடம் மொறு மொறுனு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். அதனை முள் நீக்கி உதிர்த்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய் நறுக்கிக்கொள்ளவும். அடுத்து பூண்டை லேசாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • அத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும். பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பின்னர் அத்துடன் உதிர்த்த மீன்களை போட்டு வதக்கவும்.
  • நன்கு கிளறியதும் அடுப்பை அணைக்கவும் இப்பொழுது சுவையான மீன் பொரியல் தயார்.