ஒரே மாதத்தில் நிகழப்போகும் ராஜ யோகங்களால் பண மழையில் நனைய போகும் ஐந்து ராசிகாரர்கள்!!
கிரக பெயற்சிகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இந்த மார்ச் மாதத்தில் சுக்ராதித்யா,புதா ஆதித்யா, லட்சுமி நாராயணா உள்ளிட்ட மூன்று ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இதனால் பலருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழப்போகிறது. சுக்ராதித்யா ராஜயோகம் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணை
கிரக பெயற்சிகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இந்த மார்ச் மாதத்தில் சுக்ராதித்யா,புதா ஆதித்யா, லட்சுமி நாராயணா உள்ளிட்ட மூன்று ராஜயோகங்கள் உருவாகப் போகிறது இதனால் பலருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழப்போகிறது.
சுக்ராதித்யா ராஜயோகம்
சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இணைவதால் இந்த ராஜயோகம் உருவாகப் போகிறது. இதனால் வாழ்க்கையில் வசதி படைத்தவர்களாக ஒரு சிலர் மாறிவிடுவார்கள். சமுதாயத்தில் மதிப்பு உயரும் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமாகவே கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் ஜொலிப்பார்கள்.
புதாதித்யா ராஜயோகம்
சூரிய பகவானுடன் புதன் பகவான் இணைவது ஆழ்ந்த ராஜயோகம் உருவாகப் போகிறது இதனால் நுண்ணறிவு சிந்தனை முடிவெடுக்கும் திறன் தகவல் தொடர்பு அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். வேலையில் முன்னேற்றம் காணலாம் தொழில் சாதகமாக அமையும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
லட்சுமி நாராயணா ராஜயோகம்
சுக்கிரன் மற்றும் புதன் பகவான் இணைவதால் இந்த ராஜயோகம் உருவாகும். இதனால் பொருளாதாரத்தில் செழிப்பு உண்டாகும் தொழில் லாபம் அதிகரிக்கும் செல்வம் பெருகும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். இந்த மூன்று ராஜ யோகங்களும் உருவாகப் போகின்ற இந்த காலகட்டத்தில் ஐந்து ராசிகாரர்களுக்கு பொற்காலம் என்றே கூறலாம். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை பலமாக இருக்கும். புதிய வருமானத்திற்கு வழி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்கினாலும் நல்ல பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும்.
மிதுன ராசி
புதாதித்ய ராஜயோகம் மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் மிதுன ராசியினருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதில் ஆல்பம் காட்டுவீர்கள். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பணவரவு திடீரென அதிகரிக்கும். சமூகத்தில் தீவிரமாக வெற்றி காண்பீர்கள். பல்வேறு பிரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும் அது உங்களுக்கு நல்ல காலத்தை ஏற்படுத்தும்.
சிம்ம ராசி
சிம்மராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தால் பணமழை உண்டாகும். பரம்பரை சொத்துக்கள் எதிர்பாராத விதமாக உங்களுக்கு வந்து சேரும் முதலீடு செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய செயல் திட்டத்தில் பணியாற்றினால் அதிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் வேலைகள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் தொழிலையும் முதலீட்டையும் பெருக்குவதற்கு இது சரியான காலகட்டம் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள் இதனால் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு வேலை பார்க்கக்கூடிய இடத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் அதிகரிக்கும். திடீர் பணவரவு ஏற்பட்டு பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். கூட்டுதொழிலில் நல்ல பலன் கிடைக்கும் முதலீட்டால் பெரிய வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி அனைத்தும் பெருகும்.
இதனையும் படியுங்கள் : ஒரே நாளில் ஏற்பட போகும் சூரியப் பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் பொற்காலத்தை பெறப்போகும் சில ராசிகள்!!