ஹோலி பண்டிகை பால்குண பௌர்ணமிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும். அந்த வகையில் மார்ச் 13ஆம் தேதி பால்குண பௌர்ணமி கொண்டாடப்படும். மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். மார்ச் 14ஆம் தேதி ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறப் போகிறது அன்றைய தினம் சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சந்திர கிரகணம் மற்றும் சூரிய பெயர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் நடக்கப் போகிறது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் யாராலும் பார்க்க முடியாது இந்திய நேரப்படி மார்ச் 14ஆம் தேதி காலை 9:27 மணியிலிருந்து 3.30 மணி வரை சந்திரகிரகணம் இருக்கும். பகல் பொழுதில் ஏற்படுவதால் இந்தியாவில் யாராலும் பார்க்க முடியாது இருந்தாலும் கூட இந்த நிகழ்வுகள் ஜோதிடத்தின்படி மிகவும் சுப நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகை தினத்தில் கிரகங்களின் இந்த அமைப்பினால் பயனடைய போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி

சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணம் ஹோலி தினத்தில் ஏற்படுகின்ற நிலையில் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வேலை சம்மந்தமாக இருக்கக்கூடிய அனைத்து தடைகளும் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள் பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஹோலி பண்டிகையில் பல அரிய நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும் புதிய வேலைகள் கிடைக்கும். பாதைகள் நின்ற வேலைகள் நிறைவடையும். மொத்தத்தில் உங்களுக்கு நல்ல பொற்காலமாக அமையும்.
துலாம் ராசி

ஹோலி பண்டிகையிலிருந்து துலாம் ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது என்றே கூறலாம். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எதிர்பார்க்காத வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை புதிய திசைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் பொருளாதார ஏற்றமும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : அனைத்து ராசிகளுக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்


