வீட்டில் ஃப்ரிட்ஜி மேல் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீர்! வீட்டில் பணம் சேரவே சேரதாம்!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் நம்மளால் பிரிட்ஜை பார்க்க முடியும். ஒருவர் வீட்டில் கூட ஃப்ரிட்ஜ் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அந்த அளவிற்கு பிரிட்ஜ் நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இது நாம் செய்யும் உணவை வைத்து பாதுகாக்க உதவுகிறது. நம்மில் பலரும் பிரிட்ஜின் மேல் பல பொருட்களை அடுக்கி வைப்பது உண்டு. ஆனால் அப்படி வைப்பதில் சில பொருட்கள் வாஸ்து பிரச்சினையை உருவாக்கி அவ்வீட்டில் பண இழப்பை ஏற்படுத்துகிறது.

-விளம்பரம்-

மேலும் ஃப்ரிட்ஜ்ஜை வீட்டின் சமையலறையில் வைப்பதாக இருந்தால், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டும். அதேப் போல் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதையும் அறிந்தே வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பண இழப்பை ஏற்படுத்தும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

- Advertisement -

எந்த திசையில் ஃப்ரிட்ஜ்ஜை வைக்க வேண்டும்?

ஃப்ரிட்சை நமது வீட்டில் வாங்கினால் அதை மேற்கு அல்லது தென்மேற்கு திசை பார்த்து தான் வைக்க வேண்டும், மற்ற திசைகளில் வைக்க கூடாது. அது மட்டுமில்லாமல் ஃப்ரிட்ஜை நாம் வைக்கும் பொழுது பின்னால் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தான் வைக்க வேண்டும். இந்த திசையில் பிரிட்ஜை வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம், பணம்

பலர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பணம், தங்கம் போன்றவற்றை வைப்பார்கள். இப்படி பணத்தை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்தால், அது பண இழப்பை தான் ஏற்படுத்தும். அதுவும் நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், ஃப்ரிட்ஜ்ஜின் மீது பணம் வைக்கும் போது, வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

பரிசுகள், நினைவுப் பொருட்கள்

நமக்கு பிடித்தவர்கள் நமக்கு பலவிதமான பரிசு பொருட்களை கொடுப்பதுண்டு. நாம் அவர்கள் நினைவாக அதை ஃப்ரிட்ஜின் மேல் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அப்படி செய்யக்கூடாது நாம் அந்த பரிசு பொருட்களை பிரிட்ஜின் மேல் வைப்பது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் இடையே மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

-விளம்பரம்-

மருந்துகள்

நம்மில் பலரும் ஞாபக மறதியின் காரணமாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை பிரிட்ஜின் மேல் வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல, ஆனால் அப்படி செய்வது நமது ஆரோக்கியத்தை மேலும் குன்றச் செய்யும்.

மூங்கில் செடி

இப்பொழுது பலரது வீட்டிலும் நம்மளால் மூங்கில் செடியை பார்க்க இயலும் அந்த அளவுக்கு மூங்கில் செடி நமது வாழ்க்கையில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் அழகிற்காக மூங்கில் செடியை பிரிட்ஜின் மேல் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அப்படி செய்வது அந்த வீட்டில் உள்ள பணவரவை குறைத்து பண இழப்பை சந்திக்க செய்யுமாம். எனவே இது தவறுகளை செய்ய வேண்டாம்.