தங்க நகை அடகுக்கு செல்லாமல் இருக்க, அடகு வைத்த நகையை கூட மீட்க வேண்டுமா ? இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள்!

- Advertisement -

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பணத்திற்கு அடுத்தபடியாக அவர்களது வீட்டில் சேர்க்க வேண்டும் என விரும்பும் பொருள் எதுவென்றால் தங்க நகைகள், வைரம், ரத்தினங்கள் போன்றும் இன்னும் ஏராளமான ஐஸ்வர்யங்கள் உள்ளன. இதில் அனைவரும் பொதுவாக வாங்க விரும்புவது தங்கம் மட்டும் தான். ஆனால் இந்த தங்கம் வாங்குவதற்கு கூட ஸவர்ண லட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே தான் வாங்க முடியும். என்னதான் பண புழக்கங்கள், அதிகமான பண சம்பாத்தியங்கள் இருந்தாலும் அவர்களுக்கு தங்கம் வாங்க கூடிய ஸ்வர்ண யோகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் தங்கம் சேர்க்க முடியும்.

-விளம்பரம்-

தங்க தோஷம்

நாம் பயன்படுத்தும் சில பொருட்களில் தோஷம் இருப்பது என்பது சாதாரண விஷயம். ஆனால் தங்கத்தின் மீது கண்டிப்பாக தோஷம் இருக்கும் ஆனால் எப்படி தங்கத்தின் மூலம் மீது தோஷம் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் புதியதாக வாங்கிய தங்க நகைகளில் இயல்பாகவே தோஷங்கள் இருக்கும். அதையும் மீறி நீங்கள் அடுத்தவர்களிடம் நகையை கடனாக வாங்கி அணியும்போது அந்த நகைகளில் அவர்களின் தோஷம் இருக்கும். நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளை அணியாமல் பல நாட்களாக பூட்டி வைப்பதன் மூலமாக கூட தங்க நகைகள் மீது தோஷம் ஏற்படும்.

- Advertisement -

பரிகாரம்

இதோடு மட்டுமில்லாமல் நாம் தங்கத்தை நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் கல்யாணம் மற்றும் சுப காரியங்களுக்காக சிறுக சிறுக சேர்த்து வைப்போம். ஆனால் திடீரென்று ஏற்படும் மிகப்பெரிய செலவின் காரணமாக நாம் அடகு வைக்க நேரிடும். இருந்தாலும் தங்க நகையை அடகு வைத்தது நம் மனதில் ஒரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதனால் அந்த நகை மீண்டும் அடக்கு செல்லக்கூடாது என்று நினைப்பவர்களும், தங்கத்தின் மீதுள்ள தோஷத்தை நீக்க வேண்டும் என விரும்புவர்கள் நீங்கள் அடகுலிருந்து மீட்ட நகைகள், புதியதாக வாங்கிய தங்க நகைகளை ஒரு வெள்ளை துணியில் சுற்றி உங்கள் வீட்டில் உப்பு வைத்து இருக்கும் பாத்திரத்தில் புதைத்து வைத்து விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து அந்த தங்க நகைகளை உங்கள் பூஜை அறையில் வைத்து கீழ்கண்ட ஸ்வர்ண மந்திரத்தை சொல்லும்போது தங்கத்தின் மீது உள்ள தோஷமும் நீங்கிவிடும் உங்களது நகையும் மீண்டும் அடகுக்கு செல்லாமல் இருக்கும்.

சொர்ண லட்சுமி மந்திரம்

ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
சொர்ண ஆகர்ஷண தேவ்யை
இரட்சிப்பாய்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here