உங்கள் வீட்டில் தங்கம் சேராமல் இருக்க இது தான் காரணமாக இருக்கும் ? தங்கம் சேர இதை செய்யுங்கள் !

- Advertisement -

எவ்வளவோ உலோகங்கள் இருந்தாலும் பலரும் தங்கம் மீது தான் ஆர்வம் காட்டுவார்கள். தங்கம் நம்முடன் இருக்கும் போது அது நம் மரியாதையை சற்று கூட்டிக் கொடுக்கும். அதுபோல் அனைவராலும் தங்கம் வாங்கிடவும் முடியாது என்னதான் கட்டு கட்டாக பணம் வைத்து இருந்தாலும் தங்கம் வாங்குவதற்கு ஒரு யோகம் வேண்டும். அப்படியே நாம் தங்கம் வாங்கினாலும் அந்த தங்கம் நம்மிடம் இருப்பதற்கும் ஒரு யோகம் வேண்டும். சிலருக்கு தங்கம் வாங்கினாலும் அந்த நகைகளை அவர்கள் அணிய முடியாமலேயே இருக்கும் அதற்கு காரணம் அவர்களிடம் தங்கம் நிலைப்பதற்கான யோகம் இருக்காது. தங்க அடகுக்கு சென்று விடும் இல்லை அவர்கள் வாங்கிய நகையை அணிய முடியாமலே போய்விடும். அதனால் இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தங்கம் ஏன் ஒருவரிம் நிலையாக தங்குவதில்லை மேலும் தங்கம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

-விளம்பரம்-

பராமரிப்பு

நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை பத்திரமாக முறையாக பராமரித்து வைக்க வேண்டும் அப்படி நாம் நம்மிடம் இருக்கும் பொருளை சுத்தமாகவும் தினசரி பராமரித்து அதன் மீது அலட்சியம் காட்டாமல் இருக்கும் போது அந்த பொருள் மென்மேலும் நம்மிடம் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அது பணமாக இருந்தாலும் சரி தங்கமாக இருந்தாலும் சரி. அதனால் இந்த பொருள்களை நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு தங்கமும் பணமும் நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.

- Advertisement -

சுத்தம் செய்தல்

அப்படி நீங்கள் வாங்கிய நகை பராமரிப்பதற்கு சுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது முடிந்தவரை தங்க நகைகளை புதன்கிழமையில் அல்லது வெள்ளிக்கிழமையும் செய்யலாம். ஆனால் வெள்ளிக்கிழமை நாம் அணிந்திருக்கும் நகைகளை கழட்டக்கூடாது என்பார்கள் அந்த காரணத்தினால் முடிந்த அளவிற்கு புதன்கிழமையை நகைகளை கழற்றி சுத்தம் செய்து பின் சிறிது நேரத்திலேயே மறுபடியும் அணிந்து கொள்ளுங்கள். அதே போன்று பலரும் தாலிக்கொடியை தங்கத்தினால் செய்திருப்பார்கள் அவர்கள் எக்காரணம் கொண்டு தாலிக்கொடியை கழற்றி சுத்தம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக குளிக்கும் போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தங்கம் வைக்கும் இடம்

நீங்கள் பீரோவில் அல்லது உங்கள் வீட்டிலும் தங்க நகைகள் வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பீர்கள் அது போன்ற இடங்களில் நகையே ஒன்றோடு ஒன்று ஒரசும் படி மொத்தமாக போட்டு வைக்காமல் மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்தில் உள்ள காட்டன் துணியை விரித்து அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் தங்க நகையை ஒன்றுன் ஒன்று ஒரசாமல் வைக்கும் போது உங்களிடம் மேலும் தங்கம் சேருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த இரண்டு நிற துணிகளையும் பயன்படுத்துவது நல்லது அம்மனுக்கு உகந்த நிறங்கள். மஞ்சள் நிறம் பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும் அது உங்கள் வீட்டிற்கு மங்களகரத்தை கொடுக்கும்.

தங்கம் வாங்குதல்

அதேபோல் நீங்கள் கடைகளுக்கு தங்கம் வாங்கும் செல்லும்போது முடிந்த அளவிற்கு குடும்ப உறுப்பினர்களையும் அல்லது நெருங்கிய உறவினர், நண்பர்களை மட்டும் கூட்டி செல்லவும். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர் என்பதற்காக யாரையாவது அழைத்துச் செல்லும் போது அவர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்பதை பற்றி முழுவதுமாக உங்களுக்கு தெரியாது. இல்லை நீங்கள் கூட்டு செல்லும் நபர் ஒரு நகையை தேர்வு செய்து கொடுக்கலாம் நீங்களும் ஒரு நகையை தேர்வு செய்யலாம் ஆனால் நீங்கள் அவர் தேர்வு செய்யும் நகையை வாங்கும் பட்சத்தில் உங்கள் மனம் சஞ்சலப்படும். தங்கம் நகை வாங்கும் போது மனம் சஞ்சலப்படாமல் இருக்க வேண்டும். அதனால் முடிந்த அளவிற்கு உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களை நகை எடுக்கக்கூட்டி செல்லுங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here