ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!
சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். ஆந்திராவின் சட்னி, சாம்பார், பச்சடி, துவையல் என எல்லாவற்றிலும் காரம் சற்றும் தூக்கலாகவே இருக்க
சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். ஆந்திராவின் சட்னி, சாம்பார், பச்சடி, துவையல் என எல்லாவற்றிலும் காரம் சற்றும் தூக்கலாகவே இருக்கும். அதற்கு காரணம் ஆந்திராவில் பயிரிடப்படும் மிளகாய் வகைகள் தான். குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா சட்னி, ரெட் சட்னி போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா இலைகள் ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம். அதனால் தான் இன்றைய பதிவில் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். கோங்குரா என அழைக்கப்படும் புளிச்ச கீரை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான்.
இந்த புளிச்ச கீரையில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். ஆந்திரா மக்கள் புளிச்சக்கீரையை வைத்து சைவம், அசைவம் இரண்டிலும் எக்கச்சக்கமான ரெசிபிக்களைச் செய்கிறார்கள். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த கோங்குரா சாதத்தை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சாதத்தை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோங்கூரா சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க! மிச்சம் வைக்கால் சாப்பிடுவார்கள்!