காலை டிபனுக்கு சத்துமிக்க செம்பருத்தி பூ தோசை இப்படி ஈஸியாக வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!
நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக தோசை உள்ளது. இந்த அற்புதமான தோசையில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் கா
நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக தோசை உள்ளது. இந்த அற்புதமான தோசையில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது.
முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவான் செம்பருத்தி தோசையைப் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் நாம் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி தோசை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இந்த தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.