காலை டிபனுக்கு சத்துமிக்க செம்பருத்தி பூ தோசை இப்படி ஈஸியாக வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக தோசை உள்ளது. இந்த அற்புதமான தோசையில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது.

-விளம்பரம்-

முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவான் செம்பருத்தி தோசையைப் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான்.

- Advertisement -

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் நாம் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி தோசை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இந்த தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

Print
No ratings yet

செம்பருத்தி பூ தோசை | Hibiscus Dosa Recipe In Tamil

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் நாம் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி தோசை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இந்த தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Hibiscus Dosa
Yield: 4
Calories: 129kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 செம்பருத்தி பூ
  • 1/2 கப் பச்சரிசி
  • 1/4 கப் உளுத்தம் பருப்பு
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 2 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இரண்டுமணி நேரம் கழித்து அரிசியையும், உளுந்தையும், மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், செம்பருத்தி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மாவில் கலந்து கொள்ளவும், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி தோசை தயார்.

செய்முறை குறிப்புகள்

செம்பருத்தி பூ தோசைக்கு, கொத்தமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்.

Nutrition

Serving: 2nos | Calories: 129kcal | Carbohydrates: 53g | Protein: 12g | Fat: 1.2g | Potassium: 281mg | Fiber: 9g | Iron: 2.3mg