மறந்தும் கூட வீட்டில் இந்த திசையில் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீங்க! பணம் சேரவே சேராது!

- Advertisement -

நம் வீட்டின் ஒவ்வொரு திசையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. ஆகவே தான் நாம் வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி வழியும். இதன் விளைவாக வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுமே அந்த வீட்டில் கஷ்டத்தை ஏற்படுத்தும் முக்கயமாக உங்கள் வீட்டில் பணம் என்பதே சேராது.

-விளம்பரம்-

இந்த வடக்கு திசையில் இருந்து தான் அந்த வீட்டில் பணம் அதிகம் சேர்கிறது. எனவே உங்கள் வீட்டில் பணம் அதிக சேர வேண்டுமென்று விரும்பினால், வடக்கு திசையில் ஒருசில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பண பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். இப்போது வாஸ்துப்படி எந்த பொருட்களை வீட்டின் வடக்கு திசையில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

- Advertisement -

காலணிகள்

நாம் எப்போதும் வீட்டின் வடக்கு திசையில் காலணிகளை வைக்கக்கூடாது. செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரன் குடியிருக்கும் வடக்கு திசையில் அழுக்குகள் நிறைந்த காலணிகளை வைத்தால், அது அந்த குபேரனை அவமரியாதை செய்வதற்கு சமம். இதன் விளைவாக வீட்டின் செல்வத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

குப்பைத் தொட்டி

அனைவரது வீட்டிலுமே குப்பைத் தொட்டியை வைத்திருப்போம். ஆனால் வாஸ்து படி, அந்த குப்பைத் தொட்டியை எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் வைக்கக்கூடாது. அதேப் போல் இந்த திசையை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது. இப்படி வைத்தால், அது வீட்டின் நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

புத்தகங்கள்

எடை அதிகமாக இருக்கும் புத்தகங்களை வீட்டின் வடக்கு திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் பருமனான எந்த வகை பொருட்களையும் வடக்கு திசையில் வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடையை ஏற்படுத்தி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

-விளம்பரம்-

பர்னிச்சர்

பர்னிச்சர்களும் கனமானவை. எனவே இந்த பர்னிச்சர்களை வடக்கு திசையில் வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடையை ஏற்படுத்தும். இதன் காரணமாக அந்த வீட்டில் பணம் சேராமல் இருப்பதோடு, வருமானத்தில் இடையூறு ஏற்பட்டு, பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.

இறகுகள்

இறகுகளை வீட்டில் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகம் நிரம்பியிருக்கச் செய்யும். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். எனவே உங்கள் வீட்டின் வடக்கு திசையில் இறகுகள் இருந்தால், அவற்றை உடனே அகற்றுங்கள்.

கருப்பு நிற கிரிஸ்டல்கள்

குபேரர் குடியிருக்கும் வடக்கு திசையில் கருப்பு நிற கிரிஸ்டல்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் செல்வம் பெருக கருப்பு நிற கிரிஸ்டல்களை வாஸ்துப்படி வடக்கு திசையில் வைக்காதீர்கள்.

-விளம்பரம்-