Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்தவுடன் தித்திக்கும் சுவையில் கொள்ளு லட்டு சுலபமாம வீட்டிலயே செய்யலாம்!

Advertisement

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று கொள்ளு லட்டு. இது புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொள்ளு லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதற்கேற்றபடி நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க கொள்ளு உதவுகிறது. கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது உடலுக்கு வலிமை தரும். கொள்ளு சாப்பிடும்போது உடலின் வலிமை பலமடங்கு அதிகரிக்கும். இந்த லட்டு ஒரு சிறந்த மருந்து மற்றும் இனிப்பான உணவு என்பதால் அனைவருக்கும் உண்பதற்கு பிடித்தமானதாக இருக்கும்.

இந்த கொள்ளு லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் சுவையாக இருக்கும். வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விசேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு இந்த லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.

Advertisement

கொள்ளு லட்டு | Horse Gram Laddu Recipe In Tamil

Print Recipe
இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று கொள்ளு லட்டு. இது புரத
Advertisement
தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொள்ளு லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். கொள்ளு சாப்பிடும்போது உடலின் வலிமை பலமடங்கு அதிகரிக்கும். இந்த லட்டு ஒரு சிறந்த மருந்து மற்றும் இனிப்பான உணவு என்பதால் அனைவருக்கும் உண்பதற்கு பிடித்தமானதாக இருக்கும்.
Course sweets
Cuisine Indian
Keyword Horse Gram Laddu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 321

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கொள்ளு
  • 1/2 கப் உளுந்து
  • 1 கப் வெல்லம்
  • 4 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 டீஸ்பூன் கருப்பு எள்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளு மற்றும் உளுந்தை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வேர்க்கடலை மற்றும் எள்ளை சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் கொள்ளு மற்றும் உளுந்தை சேர்த்து அரைத்து அதை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் மிக்ஸியில் வேர்க்கடலை, எள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு இவை அனைத்தையும் ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள், கருப்பு எள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான, சத்தான கொள்ளு லட்டு தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு உருண்டையை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

Nutrition

Serving: 308g | Calories: 321kcal | Carbohydrates: 5.7g | Protein: 22g | Fat: 0.5g | Sodium: 304mg | Potassium: 861mg | Fiber: 5g | Calcium: 287mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் கொஞ்சம் கொள்ளு பயிறு இருந்தால் போதும் மொறு மொறுனு முறுக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

24 நிமிடங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

7 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

16 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

24 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago