வீட்டில் கொஞ்சம் கொள்ளு பயிறு இருந்தால் போதும் மொறு மொறுனு முறுக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க!

- Advertisement -

முறுக்கு அப்டின்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும் அதுலயும் தீபாவளி டைம்ல முறுக்குக்கு இருக்கிற ஒரு மவுசு தனி தான். அந்த மாதிரி முறுக்கு எப்பவுமே அரிசி மாவுல பண்ணி சாப்பிட்டு இருக்கோம் அரிசி மாவு முறுக்கு எப்பவுமே ரொம்பவே டேஸ்டான ஒரு முறுக்கு தான். என்னதான் அரிசி மாவுல பண்ணாலும் விதவிதமா இப்போ சிலருக்கு பண்ணி பாக்குறாங்க. அந்த மாதிரி சுவையான முறுக்குகளை விதவிதமான மாவுகள்ல பண்ணி சாப்பிட்டு இருக்கோம் அப்படி தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறது கொள்ளு பயிறு முறுக்கு.

-விளம்பரம்-

கொள்ளு பயிறு சுடுறதுனால அது உடலுக்கு ரொம்பவே நல்ல மைய கொடுக்கக் கூடியது. அது உடலை ரொம்ப கட்டுக்கோப்பா வச்சிக்க கூடியது. இது தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும் போது உடம்பு ரொம்பவே ஃபிட்டா இருக்கும். குதிரைக்கு கொள்ளு கொடுப்பது குதிரையோட எடையை சரியா வச்சிகனும் அப்படிங்கறதுக்காக தான். அந்த மாதிரி வெயிட்டா இருக்கும் அப்படின்னு பீல் பண்றீங்க கொள்ளுல ரசம், துவையல், கடையில் அந்த மாதிரி எது வேணாலும் செய்து சாப்பிடலாம். நம்ம இப்ப பண்ணி சாப்பிட போறது கொள்ளு முறுக்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும் வித்தியாசமாகவும் இருக்கும்.

- Advertisement -

இந்த கொள்ளும் முறுக்கு எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப கிரிஸ்பியா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற மாதிரி எல்லாருக்கும் நிறைய சத்துக்களை கொடுக்கக் கூடியது இந்த கொள்ளும் முறுக்கு. அப்படி இந்த சுவையான கொள்ளு முறுக்கு ரொம்பவே ஈஸியா வீட்டிலேயே செஞ்சிடலாம். கடைகளில் தான் சில பயிர்கள்ல விதவிதமான உணவு பொருட்கள் செய்து கொடுக்குறாங்க. அதே மாதிரி நம்ம வீட்ல ட்ரை பண்ணி கொடுக்கும் போது அது இன்னும் நல்லா இருக்கும். அப்படி தான் இந்த கொள்ளு முறுக்கு வீட்டுல செய்யப்போறோம். வாங்க எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

கொள்ளு பயிறு முறுக்கு | Horse Gram Murukku Recipe in Tamil

முறுக்கு அப்டின்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும் அதுலயும் தீபாவளி டைம்ல முறுக்குக்கு இருக்கிற ஒரு மவுசு தனி தான். அந்த மாதிரி முறுக்கு எப்பவுமே அரிசி மாவுல பண்ணி சாப்பிட்டு இருக்கோம் அரிசி மாவு முறுக்கு எப்பவுமே ரொம்பவே டேஸ்டான ஒரு முறுக்கு தான். என்னதான் அரிசி மாவுல பண்ணாலும் விதவிதமா இப்போ சிலருக்கு பண்ணி பாக்குறாங்க. அந்த மாதிரி சுவையான முறுக்குகளை விதவிதமான மாவுகள்ல பண்ணி சாப்பிட்டு இருக்கோம் அப்படி தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறது கொள்ளு பயிறு முறுக்கு. கொள்ளு பயிறு சுடுறதுனால அது உடலுக்கு ரொம்பவே நல்ல மைய கொடுக்கக் கூடியது. அது உடலை ரொம்ப கட்டுக்கோப்பா வச்சிக்க கூடியது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: kollu chutney, Kollu Parppu Chutney, Kollu Paruppu Kadaisal, murrukku
Yield: 15 people
Calories: 152kcal
Cost: 150

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 1 கப் பச்சரிசி மாவு
  • 1/2 கப் கொள்ளு பயிறு
  • 1 ஸ்பூன் கருப்பு எள்
  • 1/4 ஸ்பூன் பெருங்கயதூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொள்ளை ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கொள்ளை சுத்தம் செய்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசிஃ கொள்ளு விழுது சேர்த்து நன்றாக கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் கருப்பு எள், பெருங்காயதூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு இந்த மாவில் சிறகு சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை வைத்து முறுக்குகளாக பிழிந்து எண்ணெயில் சேர்த்து வெந்த பிறகு இரு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து சாப்பிட கொடுத்தால் சுவையான கொள்ளு பயிறு முறுக்கு தயார்.

Nutrition

Calories: 152kcal | Carbohydrates: 30g | Protein: 12g | Fat: 6g