ஹோட்டல் ஸ்டைலில் ருசியான கார சட்னி இனி இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி செல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது. இந்த இட்

By Prem Kumar · 18/2/2024

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி செல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது. இந்த இட்லி விரைவில் செய்ய மட்டுமல்லாமல் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி முதலிடம் தான். இந்த இட்லிக்கு பொதுவாக தக்காளி சட்னி, சாம்பார், புதினா சட்னி, இஞ்சி சட்னி என்று பல விதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். சட்னிகளின் வரிசையில் இன்று நாம் சூப்பரான, காரசாரமான கார சட்னியை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு தட்டில் எத்தனை இட்லி வைத்து கொடுத்தாலும் அனைத்தும் காலி ஆகி விடும். சாம்பார், குருமா, சட்னி என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால், அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும்.

என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ஹோட்டலில் கிடைக்கும் காரச் சட்னியின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கார‌ சட்னியை ஹோட்டல் சுவையிலேயே வீட்டில் எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள். இட்லிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்தால், ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி இப்படி வித்தியாசம் முறையில் செய்து பாருங்கள், ருசி அட்டகாசமாக இருக்கும். அவசரமான வேளைகளில் செய்யக் கூடிய ஒரு சுவையான அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சாம்பார், சட்னியே தேவையில்லை காரசாரமான பூண்டு தோசை இப்படி செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full