சாம்பார், சட்னியே தேவையில்லை காரசாரமான பூண்டு தோசை இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

தோசை அப்படிச் சொன்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். அப்படி ரொம்ப ரொம்ப சுவையான தோசைகளில் பல பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருக்கோம். சைவ தோசை, அசைவ தோசை இது எல்லா வகைகளையும் சாப்பிட்டு இருப்போம். இப்படி எத்தனை வகைகளை சாப்பிட்டு இருந்தாலும் தோசையா ரொம்ப விரும்பி சாப்பிடுறவங்க அந்த தோசைல என்ன மாதிரி வெரைட்டி செய்தாலும் ரொம்ப ரசித்து சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அந்த மாதிரி இன்னிக்கு எதுவுமே இல்லாமல் ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் பண்ணி அந்த தோசை செய்து சாப்பிட்டு இருக்கோம் அதுதான் பூண்டு தோசை உங்க வீட்ல  புளிப்பு கொஞ்சம் அதிகமா தோசை மாவு இருக்கு அப்படினா நீங்க இந்த மாதிரி தோசையில் பூண்டு சட்னி சேர்த்து  சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும். இப்படி தோசையில பூண்டு சட்னி ரெடி பண்ணி சேர்த்து தோசை மேல தடவி அப்படியே மொறு மொறுன்னு விட்டு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

இப்படி பூண்டு சட்னி வச்சு பூண்டு தோசை ரெடி பண்ணி சாப்பிடும்போது இதுக்கு சாம்பார், சட்னி எந்த ஒரு சைடிஷ்மே தேவைப்படாது அப்படியே கொஞ்சம் நல்லெண்ணெயில் ஊத்தி சாப்பிட்டீங்களா அதோட டேஸ்டும் ஸ்மெல்லும் ரொம்பவே அலாதியா இருக்கும். இந்த மாதிரி பூண்டு தோசையை செய்து கொடுக்கும் போது வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாரும் விரும்பியும் சாப்பிடுவாங்க . இப்படி இது மாதிரி தோசை ஊத்தி சாப்பிடும் போது தோசை மாவுல இருக்கிற சுவை இன்னும் அதிகமாக தெரியும்ஶ்ரீ நல்ல சுவையாகவும் இருக்கும் எல்லாரும் விரும்பியும் சாப்பிடுவாங்க . இந்த மாதிரி சுவையான பூண்டு தோசை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம். ரொம்ப ஈஸியா ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு தோசை தான் இந்த பூண்டு தோசை.

Print
5 from 1 vote

பூண்டு தோசை | Garlic dosa recipe in tamil

தோசையில பூண்டு சட்னி ரெடி பண்ணி சேர்த்து தோசை மேல தடவி அப்படியே மொறு மொறுன்னு விட்டு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்படி பூண்டு சட்னி வச்சு பூண்டு தோசை ரெடி பண்ணி சாப்பிடும்போது இதுக்கு சாம்பார், சட்னி எந்த ஒரு சைடிஷ்மே தேவைப்படாது அப்படியே கொஞ்சம் நல்லெண்ணெயில் ஊத்தி சாப்பிட்டீங்களா அதோட டேஸ்டும் ஸ்மெல்லும் ரொம்பவே அலாதியா இருக்கும். இந்த மாதிரி பூண்டு தோசையை செய்து கொடுக்கும் போது வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாரும் விரும்பியும் சாப்பிடுவாங்க
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dosai
Cuisine: tamilnadu
Keyword: Andhra Kaara Dosai, Banana Dosa, Barnyard Millet Dosa, Beetroot Ragi Dosa
Yield: 6 People
Calories: 120kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 2 கரண்டி
  • 1 தோசை கல்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி மாவு
  • 15 பூண்டு  பல்      
  • 6 காய்ந்த மிளகாய்
  • புளி  எலுமிச்சை அளவு          
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
  • பிறகு காய்ந்த மிளகாயை ஒரு பாத்திரத்தை தண்ணீரில் ஒரு 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் , புளி, வதக்கி எடுத்து வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் தோசைகளை ஊற்ற வேண்டும்.
  • தோசை மீது நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக மொறுமொறுவென்று வந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு சட்னியை சேர்த்து தோசை முழுவதும் படுமாறு நன்றாக தடவி விட வேண்டும்.
  • பிறகு தோசையை திருப்பி போடாமல் மடித்து பரிமாறினால் சுவையான பூண்டு தோசை தயார்.

Nutrition

Calories: 120kcal | Carbohydrates: 16g | Protein: 12g | Fat: 10g