காரசாரமான இட்லி பொடி இப்படி செஞ்சு வீட்டுல ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

என்னதான் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் குருமா நான் வெஜ் கிரேவி னு வித விதமா செஞ்சாலும் ஒரு சில பேருக்கு இட்லி பொடி தான் ரொம்ப பிடிக்கும். இட்லி பொடி ஒரு ஓரமா வச்சு அதுல நல்லெண்ணெய் ஊத்தி அத கொலைச்சு இதுல தொட்டு சாப்பிடறவங்க ஒரு விதம். இன்னும் சில பேரு இட்லி பொடிய நல்லெண்ணெயில் ஊத

By Ramya · 23/3/2024

என்னதான் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் குருமா நான் வெஜ் கிரேவி னு வித விதமா செஞ்சாலும் ஒரு சில பேருக்கு இட்லி பொடி தான் ரொம்ப பிடிக்கும். இட்லி பொடி ஒரு ஓரமா வச்சு அதுல நல்லெண்ணெய் ஊத்தி அத கொலைச்சு இதுல தொட்டு சாப்பிடறவங்க ஒரு விதம். இன்னும் சில பேரு இட்லி பொடிய நல்லெண்ணெயில் ஊத்தி நல்லா கிளறிட்டு அதுல இட்லிகையும் போட்டு நல்லா பிரட்டி வைத்து சாப்பிடுவாங்க.

இன்னும் சில பேரு மினி இட்லி செஞ்சு கடாயில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை எல்லாம் போட்டு தாளிச்சு பொடியும் போட்டு மினி இட்லியும் போட்டு நல்லா கிளறி எடுத்து நெய் ஊத்தி சாப்பிடுவாங்க. இதுல எந்த விதமான சாப்பிட்டாலும் ரொம்பவே அட்டகாசமா சூப்பரா இருக்கும். சில சமயங்கள்ல அவசரமான நேரங்கள்ல சட்னி சாம்பார் எதுவுமே இல்லனா இந்த இட்லி பொடி நமக்கு கை கொடுக்கும். இந்த ஒரு பொடி இருந்தா போதும் நமக்கு கவலையே இல்லை. வேலைக்கு போறவங்க இதை செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டா ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

ஒரு சிலர் எப்பவுமே அவங்க வீட்ல இட்லி பொடி தீர தீர அறைச்சு வச்சுக்கிட்டே இருப்பாங்க நீங்க நிறைய விதத்துல இட்லி பொடி அரைத்து இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி அரைச்சு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி தான் இட்லி பொடி செய்வீங்க. சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சூப்பரான இட்லி பொடி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full