என்னதான் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் குருமா நான் வெஜ் கிரேவி னு வித விதமா செஞ்சாலும் ஒரு சில பேருக்கு இட்லி பொடி தான் ரொம்ப பிடிக்கும். இட்லி பொடி ஒரு ஓரமா வச்சு அதுல நல்லெண்ணெய் ஊத்தி அத கொலைச்சு இதுல தொட்டு சாப்பிடறவங்க ஒரு விதம். இன்னும் சில பேரு இட்லி பொடிய நல்லெண்ணெயில் ஊத்தி நல்லா கிளறிட்டு அதுல இட்லிகையும் போட்டு நல்லா பிரட்டி வைத்து சாப்பிடுவாங்க.
இன்னும் சில பேரு மினி இட்லி செஞ்சு கடாயில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை எல்லாம் போட்டு தாளிச்சு பொடியும் போட்டு மினி இட்லியும் போட்டு நல்லா கிளறி எடுத்து நெய் ஊத்தி சாப்பிடுவாங்க. இதுல எந்த விதமான சாப்பிட்டாலும் ரொம்பவே அட்டகாசமா சூப்பரா இருக்கும். சில சமயங்கள்ல அவசரமான நேரங்கள்ல சட்னி சாம்பார் எதுவுமே இல்லனா இந்த இட்லி பொடி நமக்கு கை கொடுக்கும். இந்த ஒரு பொடி இருந்தா போதும் நமக்கு கவலையே இல்லை. வேலைக்கு போறவங்க இதை செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டா ஆறு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
ஒரு சிலர் எப்பவுமே அவங்க வீட்ல இட்லி பொடி தீர தீர அறைச்சு வச்சுக்கிட்டே இருப்பாங்க நீங்க நிறைய விதத்துல இட்லி பொடி அரைத்து இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி அரைச்சு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி தான் இட்லி பொடி செய்வீங்க. சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சூப்பரான இட்லி பொடி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
இட்லி பொடி | Idly Podi Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் உளுத்தம் பருப்பு
- 1/4 கப் கொள்ளு பருப்பு
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் எள்
- 10 காய்ந்த மிளகாய்
- 1 சிறிய கட்டி பெருங்காயம்
- 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- பிறகு துவரம் பருப்பு மற்றும் கொள்ளு பருப்பை சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- கட்டி பெருங்காயத்தை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்த பிறகு எள் சேர்த்து நன்றாக பொரியவிட்டு எடுக்கவும்.
- இறுதியாக கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- இப்பொழுது அனைத்தையும் ஒருநாள் முழுவதும் வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்.
- அனைத்தையும் மிக்ஸி ஜார்விஸ் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான இட்லி பொடி தயார்