பணத்தடைகள் நீங்கி பணத்தை ஈர்க்க இந்த ஏழு சிலைகள் கண்டிப்பாக வீட்டில் வையுங்கள்!!

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை

By ·

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை தொடர்ந்து செய்து வரும் பொழுது அதிக அளவு பணம் உங்களிடம் வந்து சேரும். உங்கள் வருமானம் மற்றும் வங்கி இருப்பு அதிகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வீட்டில் சில வாஸ்து வைத்தியங்களை முயற்சிக்கவும். பணம் மட்டும் செல்வம் தொடர்பான அதிர்ஷ்டங்கள் கிடைக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி சிலைகள் வீட்டில் வைத்திருப்பது லட்சுமி தேவி அருள் கிடைக்க உதவும். கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய ஏழு சிலைகள் என்ன அதை எங்கு வைக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

வெள்ளி யானை சிலை

பழங்காலத்திலிருந்தே யானைகள் செல்வம் மற்றும் செழுமையின் அடையாளமாக கருதப்படுகின்றன. இது அன்னை கஜலட்சுமியின் வாகனம் என்பதால் இது யானை மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. ஆகையால் வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளி யானை சிலையை நம்முடைய வீட்டில் வைத்தால் வருமானம் உயரும். குறிப்பாக இது வீட்டில் உள்ள ராகு தோஷம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கும்.

விநாயகர் சிலை

பொதுவாகவே வீட்டில் விநாயகப் பெருமானின் சிலை வைப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. விநாயகர் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. விநாயகப் பெருமான் தம் பக்தர்களின் அனைத்துத் தடைகளையும் நீக்கி காப்பவர். எனவே, வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் வைத்து பூஜிப்பதை மூலம் உங்களின் செயலுக்கான தடைகள் நீங்கும்.

லட்சுமி தேவி சிலை

லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். லட்சுமி தேவி வசிக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை என்பது நம்பிக்கை. அதனால் லட்சுமி தேவியின் சிலையை மகாவிஷ்ணுவின் புகைப்படத்திற்கு அருகில் வைத்து பூஜை செய்வது நல்லருளை தரும். அதுமட்டுமல்லாமல் லட்சுமி தேவி, தாமரையின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் சிலைகளை வீட்டில் வைப்பது விசேஷம். இது நிலையான செல்வ வளத்தை தருவதுடன், அதை பெருகவும் செய்யும்.

காமதேனு சிலை

பொதுவாக காமதேனு சொர்க்கத்தில் வசிக்கும் தெய்வீக பசு என்று நம்பப்படுகிறது. இந்து மதத்தின் படி, காமதேனு ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றும் என்பதால் காமதேனு பசு மற்றும் கன்று சிலையை வீட்டில் வைத்திருப்பது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும். அதுமட்டுமல்லாமல் இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும், அவர்களின் மனம் படிப்பில் ஈடுபடும், மற்றும் உணவு தானியங்களுக்கான என்றும் பஞ்சம் ஏற்படாது.

ஆந்தை சிலை

இந்து சாஸ்திரங்களின் படி, ஆந்தை லட்சுமி தேவியின் வாகனம், இருப்பினும் பலர் ஆந்தை சிலையை வீட்டில் வைக்க மாட்டார்கள்.
ஆந்தையின் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் லட்சுமி நம் வீட்டில் தேவி வாசம் செய்வாள், எனவே அதை வீட்டில் வைத்திருப்பதால் நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு என்றும் பற்றாக்குறை இருக்காது. சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

ஆமை சிலை

வீட்டில் ஆமை சிலை இருப்பது மிகவும் மங்களகரமானது. அனால் ஒரு சிலர் தங்கள் வீடுகளில் ஆமை சிலைகளை வைக்க விரும்பமாட்டார்கள். ஆமை விஷ்ணுவின் வடிவமாக கருதப்படுவதால் அதன் சிலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் கோடீஸ்வர யோகம் தேடி வரும். வியாபாரம் பெருகும். இதனால் வீட்டில் அமைதியும் செழிப்பும் ஏற்படும். ஆமை சிலையை பணியிடங்களில் வைத்தால் பல்வேறு தடைகள் நீங்கும்.

பிரமிடு சிலை

பொதுவாக பலர் தங்களுடைய வீட்டில் தாஜ்மகால், பிரமிடு போன்ற படங்கள் வைப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் செம்பினால் செய்யப்பட்ட பிரமிடு சிலையை நம்முடைய வீட்டில் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். நீண்டநாட்களாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் இந்த பிரமிடு சிலையை வைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பணம் சேருமாம்!

Recipes AMP · Quick view
View full