சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் மகாலட்சுமி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பணம் சேருமாம்!

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும், பூஜை அறை கோவில் போன்றது. அதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறை. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று, தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும். குறிப்பாக, இந்த இரண்டு இடங்கள் தான் மகா லட்சுமி தேவி வந்தமரும் இடங்களாகும். இந்த சமயலறையில் சில பொருட்களை குறையாமல் வைத்துக்கொள்வதன்‌ மூலம் மகாலட்சுமியின் அருளால் பண வரவு அதிகரிக்கும்.

-விளம்பரம்-

சமையலறை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும். ஒரு வீட்டில் பூஜையறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். சமையலறை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அங்கு தான் அன்னபூரணி தாயாரின் வாசம் பரிபூரணமாக இருக்கும். இதனால் குடும்பத்தில் கஷ்டம் என்ற பேச்சை வராது.

- Advertisement -

உப்பு

இந்த உப்பு ஜாடியில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும் கடைசியாக காலி செய்த பிறகு கழுவி, இதையெல்லாம் செய்யாமல் உப்பு எப்பொழுது எடுத்தாலும் நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நமக்கு நல்ல சுபிட்சத்தை தரும். ஏனென்றால் உப்பு மகாலட்சுமி அம்சமாகவே கருதப்படுவதால் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு எதிர்மறை எண்ணங்களை உள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாக இருப்பதினால் வீட்டு சமையலறையில் உப்பு எப்பொழுதும் நிரம்பி இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.

லட்சுமிதேவி வெள்ளை நிற பொருட்களில் நிரம்பி இருக்கிறார் என்பதால் வெள்ளிக்கிழமையில் உப்பும், சர்க்கரையும் வாங்க வேண்டும். இந்த பொருட்கள் வீட்டில் குறைவில்லாமல் இருந்தாலே அதே போல் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். வருமானம் பல வழிகளிலும் வரும். மேலும் வீட்டில் உப்பு, அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஆயுளை வளர்த்து ஆரோக்கியம் தரும். இதனுள் மகாலட்சுமி வாசம்‌ செய்கிறாள்‌ என‌ சொல்லப்படுகிறது. நெல்லி திருமாலின் அருள் பெற்றது என்பதால் நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. அதனால் நெல்லிக்காய் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிக்காயை ஊறுகாய் செய்தும் வைத்திருக்கலாம் ஏனென்றால் ‌குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

-விளம்பரம்-

அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் அஞ்சறைப் பெட்டியில் ஒரு கிண்ணம் மட்டும் காலியாக இருக்கின்றது என்றால் கூட அதை அப்படியே விட்டு வைக்கக்கூடாது. பொருட்களால் நிரப்பி வைத்துக் கொள்வதுதான் நல்லது. இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளும்‌ கிடைக்கும்.

நெய்

பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருக்கிறார்கள். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் பசுவிலிருந்து கிடைக்கும் பாலிலும், நெய்யிலும் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார். வீட்டில் இருக்கும் குறைகள் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருக சமயலறையில் எப்பொழுதும் நெய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இவை அனைத்துமே மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் தான். அதனால் இவை அனைத்தையும் குறையாமல் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் மகா லட்சுமியின் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : இந்த 7 அதிர்ஷட செடிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் சேருமாம்!