மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

- Advertisement -

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும் வேறுபடும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுடைய குணங்களைப் பற்றியும் அவர்களுடைய முடிவு எடுக்கும் திறன் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

-விளம்பரம்-

தாராள மனப்பான்மை

மே மாதத்தில் பிறந்த ஒரு சிலர் நல்ல கருணை உள்ளமும் மற்றவர்களிடம் பச்சாதாபமும் காட்டுவார்கள். இயற்கையாகவே இவர்கள் தாராள மனப்பான்மையையும் கொண்டிருப்பார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களிடம் இந்த குணம் இயற்கையாகவே இருக்கும்.

- Advertisement -

அறிவு ஜீவி

மே மாதத்தில் பிறந்த உங்களுக்கு பல அறிவார்ந்த நோக்கங்கள் இருக்கும். புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள் சாகசங்களையும் புதிதாக மேற்கொள்வீர்கள். எந்த ஒரு விஷயமும் கடினமாக இருந்தால் அதனை அப்படியே விட்டுவிடாமல் அதனை முயற்சி செய்து முடித்து காட்டுவீர்கள். அறிவின் தாகத்தையும் ஆர்வமுள்ள மனதையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள்.

சமூகம்

மே மாதத்தில் பிறந்த நபர்களுடன் அனைவரும் விரும்பி பழகுவார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களும் மற்றவர்களுடன் பழகுவதை விரும்புவார்கள், சமூகத்துடன் ஒரு நல்ல நெருக்கத்தை வைத்திருப்பார்கள் வலுவான பல நட்புகளை மே மாதத்தில் பிறந்தவர்கள் வைத்திருப்பார்கள்.

நம்பிக்கை

உங்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையுடனும் கடினமான சூழலில் தன்னம்பிக்கையை இழக்காமலும் மிகவும் கடினமான மனதோடு போராடுவீர்கள். புதிய யோசனைகளை சிந்தித்து ஒரு விஷயத்தை சுவாரசியமாக மாற்றி அந்த விஷயத்தை நீங்கள் எதிர்கொள்வீர்கள். நேர்மறையான எண்ணங்களுடன் எப்பொழுதும் இருப்பீர்கள்.

-விளம்பரம்-

உறுதியானவர்கள்

சவால்களே எதிர்கொள்வதில் எப்பொழுதும் உறுதியாக இருப்பீர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பின்வாங்காமல் இலக்குகளை தொடர்ந்து விடாமுயற்சியுடன் உறுதியுடனும் ஒரு விஷயத்தை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர்கள்.

சாகசகாரர்கள்

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் புதிய இடங்களை தேடி போய் அதில் பலவித அனுபவங்களையும் சாகசங்களையும் மேற்கொள்ள ஆசைப்படுவீர்கள். கலை வெளிப்பாடுகளை நீங்கள் அதிக ஆர்வத்துடன் வெளிப்படுத்துவீர்கள் அதில் புதுவிதமான பல திட்டங்களையும் தீட்டி வெற்றி காண்பீர்கள்.

கிரியேட்டிவ் மைண்ட்

மே மாதத்தில் பிறந்த ஒரு சிலர் இசை எழுத்து கலை மற்றும் பிற செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் அதிக படைப்பாற்றல் நினைவாற்றல் போன்றவற்றை கொண்டு அதன் மூலம் தொழில்நுட்ப ஆர்வலராகவும் இருப்பீர்கள். மொத்தத்தில் படைப்பாற்றலில் அதிக ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள்.

-விளம்பரம்-

கவர்ந்திழுக்கும் திறன் கொண்டவர்கள்

மே மாதத்தில் பிறந்த ஒரு சிலர் அவர்களுடைய பேச்சு திறமை மூலம் மற்றவர்களை கவர்ந்திழக்கும் திறனை கொண்டவர்கள் பெரும்பாலும் இவர்கள் கவர்ச்சியான ஆளுமையை கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் பழகுவதிலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி பலவிதமான நட்பு வட்டாரங்களையும் வைத்திருப்பார்கள்.

சுதந்திரம்

மே மாதத்தில் பிறந்த ஒரு சிலர் அவர்களுடைய சுதந்திரத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் சுயாட்சியை அதிகமாக விரும்புவார்கள் மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தலையசைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் அவர்கள் அவர்களுடைய சொந்த முடிவில் எப்பொழுதும் உறுதியாக இருப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : தினமும் வெந்நீர் அருந்தினால் பலன்கள் அதிகம்!செரிமானம் சீராகும், கழிவு வெளியேறும், வலி விலகும்!