Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும்...

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரங்களையும் அல்லது நம்முடைய மனதில் உள்ள வேண்டுதல்களையும் மனதிலேயே சொல்லிக் கொண்டு எதுவும் பேசாமல் அந்த தெய்வத்தை சுற்றி நாம் வளம் வந்து வழிபட்டால் தெய்வத்துடைய முழு அருளையும் நாம் பெறலாம் அதன்படி நாம் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வலம் வந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் நம்முடைய வேண்டுதல்களின்படி எத்தனை முறை தெய்வத்தை வளம் பெற வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவு பார்க்கலாம்.

-விளம்பரம்-

ஆலய வழிபாடு

கோவிலுக்கு போய் அங்கு தெய்வத்தை வழிபட்ட பிறகு குறைந்தபட்சம் ஒரு தடவையாவது அந்த கோவிலை வலம் வந்து வழிபட்டால் நல்லது என்பது இந்துக்களுடைய வழக்கமாக உள்ளது இதனை நாம் பிரதட்சணம் என்றும் சொல்லலாம். இதில் பல வகைகளும் கூட உண்டு நாம் ஒரு சில தெய்வங்களை இப்படி பலம் வந்து வழிபடுவதால் நம்முடைய பாவங்கள் தீர்ந்து போகும். ஒவ்வொருவரும் ஆலயத்தை ஒவ்வொரு மாதிரியாக வளம் வருவார்கள் ஒரு சிலர் ஒருமுறை மட்டுமே பலம் வருவார்கள் ஒரு சிலர் மூன்று முறை ஒரு சிலர் ஒன்பது முறை என வலம் வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் ஆனால் உண்மையாகவே ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் எத்தனை முறை வலம் வந்து வழிபட்டால் நமக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தெய்வங்களும் வலம் வரும் எண்ணிக்கையும்

விநாயகப் பெருமான்

விநாயகப் பெருமானே மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

சனிபகவான்

-விளம்பரம்-

ஏழு முறை வலம் வந்து சனிபகவானை வழிபட வேண்டும்.

ராமர்

பெருமாள் கிருஷ்ணர் மற்றும் ராமரை நான்கு முறை வலம் வந்து தரிசிக்க வேண்டும்.

-விளம்பரம்-

சூரிய பகவான்

சூரிய பகவானை இரண்டு முறை வலம் வந்து வழிபடுவது சிறந்தது.

துர்க்கை

துர்க்கை அம்மனை ஒரே ஒருமுறை மட்டும் வலம் வந்து வழிபட்டால் போதுமானது.

சிவபெருமான்

சிவபெருமானை அரைவட்ட வடிவில் வலம் வந்து வழிபட வேண்டும். இதனை சோமசூக்த பிரதட்சண முறை என்றும் அழைப்பார்கள்.

அனுமான்

ராமனுடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயரை மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

நவகிரகங்கள்

நவக்கிரகங்களில் 9 கிரகங்கள் இருப்பதால் ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறந்தது.

முருகப்பெருமான்

முருகப்பெருமானுக்கு ஆறு என்பது மிகவும் சிறந்த ஒரு எண் என்றே சொல்லலாம் எனவே முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

அரசமரம்

அரச மரத்தை ஏழு முறை வலம் வந்து வழிபடுவது சிறப்புமகாலட்சுமிமகாலட்சுமி தெய்வத்தை ஐந்து முறை வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பிற்குரியது.

மகான்களின் சமாதி

சித்தர்களின் ஜீவசமாதி மற்றும் மகான்களின் சமாதிகளை நான்கு முறை வலம் வந்து வழிபட வேண்டும்.

பலன்கள்

கோவிலை ஒரு முறை வலம் வந்து நாம் வழிபடுவதால் நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்.

மூன்று முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதால் மனதில் இருக்கக்கூடிய பயங்கள் சுமைகள் அனைத்தும் குறைந்து அதிகாரம் ஆட்சி செல்வ வளம் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

போகலையா ஐந்து முறை வலம் வந்து வழிபடுவதால் மீண்டும் பிறவாத நிலை மகிழ்ச்சி செல்வம் அனைத்தும் கிடைத்து நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவு பெறும்.

ஆறு முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதால் நமக்கு தீமைகளை நினைக்கும் எதிரிகளை வெல்லும் திறனும் கிடைக்கும்.

ஒரு கோவிலுக்கு சென்று ஏழு முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நமக்கு கைக்கூடி வரும்.

ஆலயத்திற்கு சென்று ஒன்பது முறை ஆலயத்தை வலம் வந்து வழிபடுவதால் கிரக தோஷங்கள் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் என அனைத்தும் சரியாகும்.

பலன் தரும் வலம் வரும் எண்ணிக்கை

11 முறை ஆணையத்திற்கு சென்று ஆலயத்தை வலம் வந்து வழிபடுவதால் நம்முடைய ஆயுள் விருத்தியாகும்.

13 முறை ஆலயத்திற்கு சென்று ஆலயத்தை வலம் வந்து வழிபடுவதால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் குறை இல்லாமல் நிறைவேறும்.

15 முறை கோவிலை சுற்றி வந்து வழிபடுவதால் தனவிருத்தி உண்டாகும்.

17 முறை ஆலயத்தை சுற்றி வந்து வழிபட்டால் விவசாயம் செழித்து அதன் மூலம் அதிகப்படியான தானியங்கள் நம்மிடம் சேரும்.

19 முறை ஆலயத்தை வலம் வந்து வழிபடுவதால் கடன் பிரச்சனை ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

21 முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதால் கல்வி சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து கல்வி விருத்தி ஏற்படும்.

23 முறை கோவிலை சுற்றி வந்து வழிபடுவதால் சுக போகத்துடனான நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசதியான வாழ்க்கை கிடைக்கும்.

108 முறை கோவிலை வலம் வந்து வழிபடுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

208 முறை ஆலயத்தை சுற்றி வந்து வழிபடுவதால் யாகம் செய்ததற்கு உண்டான பலன்கள் நம்மிடம் வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போவது இந்த ஐந்து ராசிக்காரர்கள் தான்!