பீரோவில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! பணம் பீரோவில் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

நம் வீட்டில் பணம், சொத்து சுகங்கள் அனைத்து விதமான செல்வங்களும் சேர வேண்டுமானால் அதற்காக உழைக்க வேண்டும் உழைப்பதன் மூலமாகவே மட்டுமே நமக்கும் மகாலட்சுமி தயாரின் அருள் கிடைக்கும். அதன் மூலமாகவே நமது வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் சேரும். ஆனால் ஒரு சிலரோ வருடம் முழுவதும் கடினமாக அயராது உழைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு குறைவான அளவிலே வருமானமே ஈட்டுவார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணம் கூட அவர்கள் கையில் தாங்காத வண்ணம் வீண் செலவாகிக் கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் ஒருவர் எளிதான வேலைகளை செய்து குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் அளவில்லா பணம், சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். இப்படி நம்மால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் எவ்வளவு செல்வங்களை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து செயல்படுவது முக்கியம். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தயாரின் கிட்டி. வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் பின்பு ஆன்மீக ரீதியாக நம் வீட்டில் உள்ள செல்வங்கள், பணத்தை எப்படி பெருக்குவது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

வெள்ளி பொருள்

பொதுவாக அனைவரது வீடுகளிலும் பீரோக்கள் கண்டிப்பான முறையில் இருக்கத்தான் செய்யும் அப்படி நம் வீட்டில் வைத்திருக்கும் பீரோவில் உள்ள இரும்பு பகுதியை தொட்டவாறு ஏதாவது வீட்டில் இருக்கும் வெள்ளிப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் இரும்பு பீரோவில் எப்பொழுதும் வெள்ளி நாணயங்கள் ஏதாவது ஒன்று இருப்பது போன்று செய்து கொள்ளுங்கள்.

மர பீரோ

இல்லை உங்கள் வீட்டில் மர பீரோ உள்ளது என்கிற பட்சத்தில் மர பீரோவின் சாவியோ அல்லது பூட்டு உள்ள இடமோ கண்டிப்பான முறையில் இருப்பாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் வெள்ளி உலோகம் இருப்பது போன்று செய்து கொள்ளுங்கள். உதாரணமாக பீரோ மரமாக இருந்தாலும் சாவி இரும்பில் தான் இருக்கும். அதில் கீ செயின் வெள்ளியால் செய்யப்பட்டதாக போடலாம் அல்லது பூட்டில் ஏதாவது வெள்ளி தொட்டபடி இருப்பது போன்று செய்து விடுங்கள்.

அலமாரி லாக்கர்

இன்னும் பெரும்பாலான வீட்டில் அலமாரி போன்ற அமைப்பில் சுவரொடும் சேர்த்து, பீரோ போல் வைத்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் அந்த அலமாரியில் பணம் அல்லது தங்கம் வைப்பதற்கு செய்யப்பட்ட லாக்கர் அல்லது பண பெட்டி ஏதாவது வைத்து இருப்பார்கள் அல்லவா அந்த லாக்கரில் வெள்ளி நாணயங்கள் அல்லது வெள்ளி பொருட்கள் எப்போதும் இருக்கும் படி இருப்புடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி உங்கள் வீட்டில் நீங்கள் பணம் வைத்திருக்கும் பீரோ அலமாரி லாக்கர் என எதுவாக இருந்தாலும் ஒரு கடுகளவாது வெள்ளி பொருட்கள் இருப்பது போன்ற செய்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

சுக்கிர பகவான்

ஏனென்றால் நாம் பணம் வைக்கும் இடமாக இருந்தாலும் தங்கம் வைக்கும் இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளி உலோகம் இருக்கும்போது சுக்கிர பகவானின் முழுமையான அருள் கிடைத்து. நமது செல்வ வளம் அதிகரிக்கும். ஏனென்றால் சுக்கிர பகவானுக்கு உகந்த உலகம் என்பது வெள்ளி தான். அதனால் வெள்ளி அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை நம் இரும்பு பீரோ, மரத்தால் செய்யப்பட்ட பீரோக்களில் இந்த மாதிரி அனைத்து இடத்திலும் இருப்பது போன்ற செய்தால் உங்கள் வீட்டின் பணவரவு அதிகரித்து, செல்வம் மடமடவன சேர்த்து கொண்டே இருக்கும். அதை நீங்களே சிறிது நாட்களில் உணர தொடங்குகிறீர்கள் கண்டிப்பாக இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here