அடுத்தமுறை காடை பிரியாணி இப்படி சுலபமாக செஞ்சி பாருங்க! சிக்கன் பிரியாணி தோற்று போயிரும்!

பிரியாணி பிடிக்காத ஆள் யாராவது இருக்க முடியுமா? சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி பிரியாணிக்கென்றே தனி சுவையும் மணமும் உண்டு. பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சுருங்கச் சொன்

By Prem Kumar · 24/10/2023

பிரியாணி பிடிக்காத ஆள் யாராவது இருக்க முடியுமா? சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி பிரியாணிக்கென்றே தனி சுவையும் மணமும் உண்டு. பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சுருங்கச் சொன்னால் இதன் பெயர் ஒன்றே போதுமானது. பால்மணம் மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த வயதானவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாக இருக்கின்றனர்.

சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை.

விடுமுறையில் விதவிதமாக சமைத்து உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் கவர விரும்புறீங்களா? இதோ உங்களுக்காகவே காடை பிரியாணி ரெசிபி. மட்டன், சிக்கன், மீனில் பிரியாணி சமைத்து சலித்து போனவர்களுக்கு காடை பிரியாணி மீண்டும் உங்கள் சுவையுணர்வுகளை தூண்டிவிடும். அருமையான காடை பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Recipes AMP · Quick view
View full