Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான இட்லி மாவு போண்டா இப்படி செய்து பாருங்க! காலை டிபன் உடன் சாப்பிட பக்காவா இருக்கும்!

Advertisement

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க.

அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கார போண்டா | Kaara Bonda Recipe In Tamil

Print Recipe
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, Snack
Cuisine Indian, TAMIL
Keyword kaara bonda, கார போண்டா
Prep Time 15 minutes
Cook Time 5 minutes
Total Time 23 minutes
Servings 4 people
Calories 72

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 2 கப் இட்லி மாவு புளிக்க வைத்தது
  • 2 வர மிளகாய் ஊறவைத்தது
  • 2 பல் பூண்டு
  • ½ கப் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை கொஞ்சம் நறுக்கியது
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  • முதலில்
    Advertisement
    மிக்சியில் 10 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவைத்த வர மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து புளித்த இட்லி மாவு 2 கப் ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து கலந்து விடவும்.
  • அடுத்து அதில் ரவை, மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  • மாவு ஊறியதும் ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி ஊறவைத்துள்ள மாவில் சேர்த்து கலந்துவிடவும். இட்லிக்கு அரைத்த மாவு என்பதால் உப்பு தேவையில்லை.
  • பிறகு ஒரு கடையில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Nutrition

Serving: 600G | Calories: 72kcal | Carbohydrates: 45g | Protein: 4g | Fat: 2g | Saturated Fat: 0.7g | Cholesterol: 0.5mg | Sugar: 0.2g

இதையும் படியுங்கள் : ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Advertisement
Ramya

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

3 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

4 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

6 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

11 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

11 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

11 மணி நேரங்கள் ago