- Prep
- 15 min
- Cook
- 5 min
- Total
- 23 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Snack
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க.
அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படியுங்கள் : ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!
Ingredients
Method
முதலில் மிக்சியில் 10 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவைத்த வர மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து புளித்த இட்லி மாவு 2 கப் ஒரு பௌலில் சேர்த்து அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து அதில் ரவை, மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
மாவு ஊறியதும் ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி ஊறவைத்துள்ள மாவில் சேர்த்து கலந்துவிடவும். இட்லிக்கு அரைத்த மாவு என்பதால் உப்பு தேவையில்லை.
பிறகு ஒரு கடையில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.






