விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், வாழைக்காய் தட்டை செய்து கொடுங்கள்.
தமிழ்நாட்டில் பல சுவையான ஸ்நாக்ஸ் பிரபலமாக உள்ளன. அதில் தனித்துவமானதும், மிகவும் பிரபலமானதும் தட்டை. இந்த சிறப்பு உணவு நம்முடைய மாவட்டத்தில் அதிகம் பிரபலமடைந்தது. இது ஒரு பாரம்பரியமான வீட்டு சமையலிலிருந்து, தெரு உணவாக வளர்ந்து, இன்று பலரின் விருப்பமான ஸ்நாக்காக உள்ளது. ஆனால் வழக்கமான தட்டை ரெசிபி செய்யாமல் நாம் சற்று வித்தியாசமாக வாழைக்காய் வைத்து செய்ய உள்ளோம்.
இந்த வாழைக்காய் தட்டை ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதுவும் மாலை பொழுதில் சூடான டீயுடன் இந்த வாழைக்காய் தட்டை சாப்பிடும் போது அவ்வளவு நிறைவாக இருக்கும். ஒரு வாரம் என்ன, ஒரு மாதத்துக்கு கூட வைத்து சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியம் நிறைந்த இந்த வாழைக்காய் தட்டை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைக்காய் தட்டை | Vazhakkai Thattai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 2 வாழைக்காய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
செய்முறை
- முதலில் வாழைக்காயை தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- பின் இதனை ஒரு பவுளால் அழுத்தி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் தட்டை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு வாழைக்காய் மசாலா





