- Advertisement -
Home ஸ்நாக்ஸ் வெள்ளரிக்காய் வைத்து சுவையான சாண்ட்விச் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை...

வெள்ளரிக்காய் வைத்து சுவையான சாண்ட்விச் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடாதவர்கள்!!

- Advertisement -

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் வெள்ளரிக்காய் வைத்து சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அதுலயும் வீட்டில் செய்த பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இதையே செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்து கொடுங்கள். தற்போது இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளைத் தாண்டி சாட் உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவர்களுக்கு தயாராக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

தற்போது அந்த துரித உணவுகளைச் சத்தான உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நமக்கு வந்துவிட்டது. அந்த வகையில் உடலுக்குச் சிக்கல்களைத் தராத உடனடியாக செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெசிபியை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் எப்பவுமே நீங்கள் இந்த ரெசிபியை தான் செய்து சாப்பிடுவீர்கள். இப்போது சுவையான வெள்ளரிக்காய் சாண்ட்விச் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
No ratings yet

வெள்ளரிக்காய் சாண்ட்விச் | Cucumber Sandwich Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் வெள்ளரிக்காய் வைத்து சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்டில் செய்த பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இதையே செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்து கொடுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening
Cuisine: Indian, TAMIL
Keyword: Cucumber Sandwich
Yield: 4 People
Calories: 83kcal

Equipment

  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 வெள்ளரிக்காய்
  • 8 பிரெட் துண்டுகள்
  • டேபிள் ஸ்பூன் சீஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ்
  • 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் சீஸ், மயோனைஸ், சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிரெட்டில் ஓரங்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் பிரெட்டில் நாம் செய்து வைத்துள்ள கலவையை தடவி அதன்மேல் வெள்ளரிக்காய் வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் சாண்ட்விச் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 83kcal | Carbohydrates: 4.1g | Protein: 19g | Fat: 3.3g | Sodium: 82mg | Potassium: 141mg | Fiber: 18g | Vitamin C: 60mg | Calcium: 24mg | Iron: 27mg

இதனையும் படியுங்கள் : நாகர் கோவில் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி?