இன்று இரவுக்குள் இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் கோடி கடனும் காணமல் போகும்! சக்தி வாய்ந்த பிரதோஷம் !

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரு தினங்களுக்கு பிரதோஷ தினங்களாக வருகிறது. இன்று ஆவணி மாத செவ்வாய் பிரதோஷம். பிரதோஷ தினத்தில் எப்படி முறையாக வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான் என்றாலும், நம் கர்மாக்கள்

By ·

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரு தினங்களுக்கு பிரதோஷ தினங்களாக வருகிறது. இன்று ஆவணி மாத செவ்வாய் பிரதோஷம். பிரதோஷ தினத்தில் எப்படி முறையாக வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான் என்றாலும், நம் கர்மாக்கள் கடைத்தேற கால நேரம் பார்த்து வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் செய்யும் போது அவை சிறப்பான பலன்களை தரும்.

சுபகாரியங்கள் செய்வதற்கான சிறந்த மாதங்களில் ஒன்றாக ஆவணி மாதம் இருக்கிறது. சூரியன் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியில் இருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் ஆகும். சூரியன், புதன் இரண்டும் நட்பு கிரகங்கள் என்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் நன்மையான பலன்களை தரவல்ல மாதமாக இருக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களில் பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறப்பான நன்மைகளை அளிக்க வல்லதாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினமாக ஆவணி மாத பிரதோஷம் வருகிறது. இந்த தினத்தில் நாம் தெய்வங்களை எப்படி வழிபட்டால் பல அற்புதமான பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நம்மில் நிறைய பேர் பணம் வருவதற்காக தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம் அதிலும் கடன் எல்லாம் வாழ்வை வாழ்வதற்காக தான் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இந்த ஆவணி மாத பிரதோஷம் செவ்வாய்க்கிழமையில் வருவதால் நம்முடைய கடன் அனைத்தும் அடைந்து விடும் இந்த ஒரு வரி மந்திரத்தை நாம் சொன்னாலே போதும். எப்படி திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளனவோ அதே மாறி தான் இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய்க்கிழமையில் வருகின்ற பிரதோஷமும் சக்தி வாய்ந்தது. சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்களை இருக்காது என்பது பிரபஞ்ச நியதி.

பிரதோஷ வழிபாடு

மாலை நேரத்தில் வருகின்ற கால நேரத்தை தான் நாம் பிரதோஷம் என்று கூறுகிறோம். அதாவது 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் வரும் நேரத்தை நாம் பிரதோஷம் என்று கூறுகிறோம். சிவன் கோவில்களில் 4 மணியிலிருந்து பிரதோஷ வழிபாடு தொடங்கிவிடும் நாம் நான்கு மணிக்கு சென்று பிரதோஷத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் இதுதான் முதல் விஷயம்.

எந்தெந்த பொருட்களை பிரதோஷ வழிபாட்டிற்கு வாங்கிக் கொடுக்கலாம்

முதலாவதாக பிரதோஷ வழிபாட்டிற்கு நாம் பசும்பால் வாங்கிக் கொடுக்கலாம் ஆனால் பாக்கெட்டில் விற்கும் பாலை வாங்கி கொடுக்கக் கூடாது. அடுத்ததாக சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான விபூதியை அதாவது மாட்டுச் சாணத்தில் இருந்து செய்த விபூதியை நாம் வாங்கி கொடுக்கலாம். இது நமது குடும்பத்திற்கு மென்மேலும் வளர்ச்சியை கொடுக்கும். அடுத்த முக்கியமான பொருட்களான கரும்புச்சாறு, சந்தனம், அரிசி மாவு, மஞ்சள், இளநீர் போன்றவற்றை நாம் அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம். இந்த அபிஷேகத்தை நமது கண்களால் பார்த்தாலும் சரி அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும் சரி நமது குடும்பத்தில் மென்மேலும் வளர்ச்சியை காணலாம் என்பது சாஸ்திர கூறுகள்.

கடன் அடைவதற்கான மந்திரம்

இன்று ஆவணி மாதத்தில் செவ்வாய்க்கிழமையில் வரும் மிகவும் முக்கியமான பிரதோஷங்களில் ஒன்று. ஆவணி மாதம் என்றாலே மங்களகரமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நாம் நான்கு மணிக்கே சிவன் கோயிலுக்கு சென்று சோமசுத்த பிரதக்ஷணம் செய்ய வேண்டும். அந்த வேலையில் நாம் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அதாவது வீட்டிலும் சொல்லலாம் கோவிலுக்கு சென்று அங்கும் பிரதோஷ வேளையில் சொல்லலாம். பிரதோஷ வேளையில் இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபடும் பொழுது நமக்கான பலன் நம்மிடம் பல மடங்காக திரும்ப வரும்.

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/karu-manjal-parigaram-in-tamil/

“தரித்திர துக்க தகனம் சிவ ஸ்தோத்திரம்” இந்த ஸ்லோகத்தை சிவபெருமானை நினைத்து நாம் சொல்லும் பொழுது கடன் பிரச்சினை என்பது நமது வாழ்வில் எப்பொழுதும் இருக்கவே இருக்காது என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். இந்த மந்திரத்தை மனதிற்குள் காலையிலிருந்து மாலை வரை எத்தனை தடவை உங்களால் சொல்ல இயலுமோ அத்தனை தடவை கூறிக் கொண்டே இருக்கலாம். குறைந்தபட்சமாக 27 முறையும் அதிகபட்சமாக 108 முறையும் இந்த ஸ்லோகத்தை கூறலாம். இந்த ஸ்லோகத்தை 48 திங்கட்கிழமைகளிலும் நீங்கள் சொல்லலாம். அல்லது 48 பிரதோஷ தினங்களிலும் கூறலாம். இதனை நாம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அதனை அடைப்பதற்கான வழியை சிவபெருமான் நமக்கு காட்டுவார் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் சிவபெருமானை நினைத்து நாம் இந்த மந்திரத்தை சொன்னால் நமது கர்ம வினைகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.

Recipes AMP · Quick view
View full