பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதே இல்லை என்று பலரும் புலம்புகிறார்கள். இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது.
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசிவரை தெரியாமலேயே போகின்றது. ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளாதவர்கள் கையில் கூட, பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் தானாக தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். அதற்கான ஒரு தாந்திரீக சூட்சம பரிகாரத்தை பற்றித் தான் நாம் இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமைகளிலும் செய்யலாம் இதற்கு நான் கிழமை என்று பார்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. குறிப்பாக காலை வேலையில் பிரம்மமுகுர்த்த நேரத்தில் இதனை செய்தால் மிகவும் பலன் அளிக்க கூடிய வகையில் இருக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நாட்டு மருந்து கடையிலிருந்து கரு மஞ்சள்கிழங்கை வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒன்றை எடுத்து சிகப்பு துணி அல்லது சிகப்பு பட்டு துணியில் கருமஞ்சளை சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குங்குமத்தில் பன்னீர் கலந்து குலைத்து இந்த கருமஞ்சளுக்கு பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனை பூஜை அறையில் வைத்து தொடர்ந்து 11 நாட்கள் செய்து வாருங்கள். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.
பணத்தை ஈர்க்கும்
பதினோரு நாட்கள் கழிந்த பின் இந்த கருமஞ்சளுடன் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து ஒரு முடிச்சாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் குபேர மூலையில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள். இந்தக் கருமஞ்சளுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, நீங்கள் இந்த முடிச்சை வைத்தவுடன் உங்களுக்கு பணம் வரவு வர ஆரம்பிக்கும்.
இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பதும் உண்மையான ஒன்றுதான். இப்படியாக கருமஞ்சள் நாம் எப்படி பயன்படுத்தினாலும் அதன் மூலம் நமக்கு பணவரவு இந்து கொண்டேதான் இருக்கும். பணவரவை நமக்கு தந்து கொண்டிருக்கும் இந்த கருமஞ்சள் நம்மிடம் வைத்துக்கொண்டால், குபேரர் மட்டும் நம்மை விட்டு சென்றுவிடவா போகிறார்! நிச்சயம் கட்டாயம் நம்மிடமே குபேரர் வாசம் செய்ய கருமஞ்சளை நம் வீட்டில் வைத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி.