நினைத்தது நடக்க காமாட்சி அம்மன் வழிபாடு!!

என்னதான் நாம் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பான ஒன்று. பெண் தெய்வங்கள் நிறைய இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மனை முழு மனதோடு நாம் வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்

By ·

என்னதான் நாம் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பான ஒன்று. பெண் தெய்வங்கள் நிறைய இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மனை முழு மனதோடு நாம் வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று கலர் கூற கேட்டிருப்போம். அப்படிப்பட்ட காமாட்சி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

காஞ்சி மகா பெரியவா

ஒரு சிலர் காஞ்சி மகா பெரியவா பற்றி அறிந்திருப்பார்கள் ஒரு சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சொடக்கு போடும் நேரத்தில் பலருடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை மாற்றி அமைப்பவர் தான் காஞ்சி மகா பெரியவா. இன்றும் கூட ஒரு சிலர் வீட்டில் அவருடைய புகைப்படத்தை வைத்து குருவாக வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட மகா பெரிய வா கூறிய காமாட்சி அம்மன் வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்க்க போகிறோம்.

வழிபாட்டை செய்யும் முறை

வெள்ளிக்கிழமை அன்று காலை அல்லது மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 16 வாரங்கள் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் காமாட்சி அம்மன் படம் வேண்டும் பூஜை அறையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் பன்னீர் தெளித்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டு காமாட்சி அம்மன் புகைப்படத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சந்தன குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிகுந்த மலர்களை காமாட்சி அம்மனுக்கு வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து அகல் விளக்கு ஏற்றி காமாட்சி அம்மனின் அஷ்டோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும் பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

நெய்வேதியம்

அகல் விளக்கு முழுவதுமாக இருந்து முடித்த பிறகு அதனை பத்திரமாக எடுத்து வைத்து அடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் வாரம் ஏற்றிய அகல்விளக்கோடு புதிதாக மற்றொரு அகல் விளக்கையும் சேர்த்து இரண்டு தீபமாக ஏற்ற வேண்டும். வாசனை மிகுந்த மலர்கள் நிச்சயமாக வேண்டும் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து 16 வாரமும் தொடர்ந்து மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைத்தது நிச்சயமாக நடக்கும் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நல்லதே நடக்கும் முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : மனபாரம் குறைய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full