பொதுவாக ஒரு சிலர் தெய்வத்தை வழிபாடு செய்வது பணத்திற்காக இருக்கும் ஒரு சிலர் சொத்து சேர வேண்டும் என்று வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் மன நிம்மதிக்காக மட்டுமே தெய்வத்தை வழிபாடு செய்வார்கள். என்ன தான் பணம் இருந்தாலும் மன நிம்மதி இல்லை என்றால் அந்த பணம் தேவையில்லாத ஒன்று தான். எனவே பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் நலனுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மன நிம்மதிக்காகவும் தெய்வத்திடம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மன நிம்மதிக்காக வழிபாடு செய்பவர்களுக்கு நரசிம்மர் வழிபாடு மிகவும் சிறந்தது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மன நிம்மதி

மன நிம்மதி என்ற ஒன்று இல்லையென்றால் இரவில் சரியாக தூங்க முடியாது. சந்தோஷம் இல்லையென்றால் யாரிடமும் சகஜமாக பேச முடியாது அப்படி மனநிம்மதியே இல்லாதவர்கள் இந்த வழிபாட்டை செய்தால் மனம் லேசாகும். இந்த வழிபாட்டை நரசிம்மர் சன்னிதானத்திற்கு சென்று செய்யலாம். இல்லையென்றால் வீட்டிலேயே கூட மாலை நேரத்தில் 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் இதை செய்ய வேண்டும். இந்த நேரத்திற்குள் நிச்சயமாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு
மாலை குறிப்பிட்ட நேரத்தில் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். லட்சுமி நரசிம்மரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு டம்ளர் பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து லட்சுமி நரசிம்மரை மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மரின் திருவுருவப்படம் பூஜை அறையில் இருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை பெருமாளை லட்சுமி நரசிம்மராக நினைத்துக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம்
ஓம் நமோ லக்ஷ்மி நரசிம்மாய நமஹ
உங்களுடைய பிரச்சனைகளை லட்சுமி நரசிம்மரிடம் கூறி இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முடிக்க வேண்டும். பிறகு உங்களுடைய மனக்கவலையானது குறைவதை உங்களால் உணர முடியும். இந்த பூஜையை செய்து முடிப்பதற்குள் உங்களுடைய மனது லேசாக மாறியிருக்கும். மன அழுத்தம் மன பாரம் அனைத்தும் குறைந்து பூ போல மாறிவிடும். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் அனைத்து பிரச்சனைகளையும் நரசிம்மர் பார்த்துக் கொள்வார். எந்த ஒரு தெய்வத்தையும் மனதார நாம் கூப்பிட்டால் ஓடோடி வந்துவிடுவார்கள். அதேபோல் தான் நரசிம்மரும். பிரகலாதன் கூப்பிட்ட குரலுக்கு அவதரித்த கடவுள் நரசிம்மர் எனவே நம்முடைய கஷ்டங்களையும் அவரிடம் கூறினால் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நமக்கு உதவி செய்வார். நம்பிக்கையோடு இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம்



