Advertisement
ஆன்மிகம்

உங்களுக்கு வறுமை, பண கஷ்டம் தரும் கண் திருஷ்டியே ஒரே அடியாக போக்க சிறிது மிளகு இருந்தால் போதும்!

Advertisement

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும். ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். ஏன் இப்படி என்று யோசித்தாலோ அல்லது கோவிலுக்கு சென்று பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலோ கண் திருஷ்டியின் தாக்குதல் அதிகம் பாதித்து இருப்பதாக சொல்லி அதற்கேற்ப பரிகாரமும் சொல்வார்கள். கண் திருஷ்டி போக சில பரிகாரங்களையும் சொல்வார்கள். அதில் ஒன்றனை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்?

பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் சுற்றிப்போடுவார்கள். வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். இது பொதுவாக திருஷ்டி கழிக்கும் முறையாகும். கல் உப்பு, வர மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது.

மிளகு பரிகாரம்

உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூடத் திருஷ்டி உண்டாகும். பரபரப்பாகச் செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாகச் செயல்பட நேரிடும். திடீர் மந்தம் இந்தத்

Advertisement
திருஷ்டியினால் தான் ஏற்படும். இதற்குப் பரிகாரம் மிளகு சுற்றிப்போடுவது தான். உங்கள் கையில் 5 மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தெரு முச்சந்தி அல்லது வீட்டு மாடியில் நின்று செய்யுங்கள். கிழக்கு நோக்கி நின்று கொள்ளுங்கள், நீங்கள் எடுத்து வைத்திருக்கும்
Advertisement
மிளகை தலையை சுற்றி இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என ஏழு முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி நான்கு மிளகை நான்கு திசையில் எறிந்து விடுங்கள். ஐந்தாவது மிளகை மேல் நோக்கி எறிந்து விடுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்நாளும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் செய்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த பரிகாரத்தை மாலை 6.30 மணிக்கு மேல் தான் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் திருஷ்டி போக இந்த பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிகாரத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை நீங்களும் செய்து பலன்‌ அடைந்து கொள்ளுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

30 நிமிடங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

46 நிமிடங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

5 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

5 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

5 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

6 மணி நேரங்கள் ago