ஊரை போல உணவிலும் தெய்வீக மனம், சுவையுடன் கூடிய காஞ்சிபுரம் இட்லி ஆவி பறக்க இப்படி செய்து பாருங்க!
காஞ்சிபுரம் என்றால் பட்டு எவ்வளவு நினைவுக்கு வருகிறது அதே அளவுக்கு நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி தான். மிகப்பெரிய பாரம்பரியமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை ம
காஞ்சிபுரம் என்றால் பட்டு எவ்வளவு நினைவுக்கு வருகிறது அதே அளவுக்கு நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி தான். மிகப்பெரிய பாரம்பரியமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்யும் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து இட்லியை வேகவைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரபலமான தென்னிந்திய இட்லியாகும். மிளகு, சீரகம் போன்றவற்றால் தாளிக்கப்பட்ட இட்லி. வழக்கமான இட்லிகளை சாப்பிட்டு சலிப்பாக இருக்கும் போது காஞ்சிபுரம் இட்லியை தயார் செய்து ருசிக்கலாம். மிளகு, ஜீரா, இஞ்சி போன்ற பல பொருட்களுடன் தாளிக்கப்படுவதால்
இதன் சுவை வித்தியாசமானது. மந்தாரை இலைகள் இட்லியின் சுவையை கூட்டுகின்றன. இட்லிக்கான மாவு மசாலாப் பொருட்களுடன் கலந்து ஆவியில் வேகவைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் இட்லி. தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி போன்றவையோடு அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.