ஆரோக்கியம் நிறைந்த ருசியான கற்பூரவள்ளி சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!
தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன
தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சிறிது கற்பூரவள்ளி இலை சேர்த்து செய்ய உள்ளோம். கற்பூரவல்லி செடி மூலிகைக்கு அதிக அளவு பயன்படுகிறது. இந்த கற்பூரவல்லிசெடி வறட்டு இருமல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு நிவாரணியாக உள்ளது. இந்த கற்பூரவல்லி இலையை சளி பிடித்துள்ள குழந்தைகளுக்கு அடுப்பில் வாட்டி விட்டு கல் உப்பு சேர்த்து நசுக்கி சாறு மட்டும் பிழிந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
அது மட்டுமல்ல அது சளி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜியாக கூட செய்து கொடுப்பார்கள். மேலும் ஆவி பிடிப்பதில் கூட கற்பூரவல்லி இலைகளை சூடு தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதும் மூக்கடைப்பு சளித்தொல்லை போன்றவைகளுக்கு நல்ல நிவாரணம் தரும். கோதுமை மாவினை சேர்த்து செய்யப்படும் இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். சப்பாத்திகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த கற்பூரவள்ளி இலை சப்பாத்தி. இந்த சப்பாத்தியானது சுவையாகவும், பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யும் வகையில் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட காரசாரமான ருசியில் பன்னீர் மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!