- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஈஸியான முறையில் பன்னீர் மசாலா செய்து கொடுங்கள். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் பன்னீர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது.
இந்த பன்னீர் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பன்னீர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் பன்னீர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம். சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பன்னீர் மசாலா எப்படி தாயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி வறுத்த பன்னீரை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கிரேவி கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், இறுதியாக கஸ்சூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் மசாலா தயார்.






