ருசியான பன்னீர் புலாவ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன.  இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

-விளம்பரம்-

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், புதினா புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் என்று பல வகை உண்டு. வீட்டில். மதிய உணவு செய்யும் போது பெரும்பாலும்  புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. பன்னீர் மிகவும் சுவையானது மட்டும் அல்ல அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பன்னீர் பால் உணவு என்பதால்அதில் கால்சியம் அதிகமாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம்.

- Advertisement -

பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த சுவையான பன்னீர் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அடிக்கடி இந்த பன்னீர் புலாவை செய்து தர சொல்லி வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். சரி வாங்க இந்த சுவையான பன்னீர் புலாவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
3.50 from 2 votes

பன்னீர் புலாவ் | Paneer Pulao Recipe In Tamil

புலாவில்பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், புதினா புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் என்று பல வகை உண்டு. வீட்டில். மதியஉணவு செய்யும் போது பெரும்பாலும்  புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. பன்னீர் மிகவும் சுவையானது மட்டும் அல்ல அதை சாப்பிட்டால் உடலுக்குமிகவும் நல்லது. மேலும் பன்னீர் பால் உணவு என்பதால்அதில் கால்சியம் அதிகமாக இருக்கும்.மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். சரி வாங்க இந்த சுவையான பன்னீர் புலாவ் எப்படி செய்வதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: paneer pulao
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1 டம்ளர் அரிசி
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் தயிர்
  • 1/2 கப் புதினா
  • 1/2 கப் கொத்தமல்லி இலை
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/4 சோம்பு
  • 1 அன்னாசிபூ

செய்முறை

  • முதலில் பன்னீரை நடுத்தரமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுசேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி பட்டை,‌ சோம்பு, லவங்கம், அன்னாசிபூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு தக்காளி,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது, புதினா , கொத்தமல்லி, மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • நன்றாக கலந்து பச்சை வாசனை போன பிறகு அரிசியை சேர்த்து  நன்குகலந்து விடவும். அதன்பின் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து  கலந்து விட்டு பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்துகுக்கரை மூடி விடவும்.
  • பின்னர் குக்கரில் 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும். பின் விசில் போனதும் எடுத்து சூடாக பரிமாறினால்சுவையான பன்னீர் புலாவ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் டிக்கா ரெம்ப சுலபமாக இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!