காரசாரமான ருசியில் பன்னீர் டிக்கா ரெம்ப சுலபமாக இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

புரதம் நிறைந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், ஃபோலிட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது.

-விளம்பரம்-

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும். பன்னீரை பலவிதமாக, பல வகையாக சமைக்கலாம். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது.

- Advertisement -

பன்னீர் பரோட்டாவில் தொடங்கி பன்னீர் பாப்கார்ன் வரை பன்னீரை வைத்து செய்யும் எல்லா ரெசிபிக்களும் ஹிட் ஆகிவிடும். அதிலும் ஸ்டார்டர் உணவாக பரிமாறப்படும் பன்னீர் டிக்காவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ரெஸ்டாரன்களில் அதிக விலை கொடுத்து வாங்கினாலும் ஒரு சில பன்னீர் துண்டுகள் மட்டுமே பரிமாறப்படும். இதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், குறைந்த செலவில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து பன்னீர் டிக்காவை சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும்.

Print
3 from 1 vote

பன்னீர் டிக்கா | Paneer Tikka Recipe In Tamil

பன்னீரை பலவிதமாக, பல வகையாக சமைக்கலாம். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது. வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. பன்னீர் பரோட்டாவில் தொடங்கி பன்னீர் பாப்கார்ன் வரை பன்னீரை வைத்து செய்யும் எல்லா ரெசிபிக்களும் ஹிட் ஆகிவிடும். அதிலும் ஸ்டார்டர் உணவாக பரிமாறப்படும் பன்னீர் டிக்காவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ரெஸ்டாரன்களில் அதிக விலை கொடுத்து வாங்கினாலும் ஒரு சில பன்னீர் துண்டுகள் மட்டுமே பரிமாறப்படும். இதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், குறைந்த செலவில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து பன்னீர் டிக்காவை சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: paneer tikka
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தவா

தேவையான பொருட்கள்

  • பன்னீர் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/2 டீஸ்பூன் சிகப்பு புட் கலர்
  • 1/2 தக்காளி
  • 1/2 குடைமிளகாய்
  • வெண்ணெய் தேவையான அளவு
  • 2 நீள குச்சி

செய்முறை

  • முதலில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கரம் மசாலா, கருப்பு உப்பு, சீரக தூள், தயிர், ரெட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பிறகு பன்னீர், குடைமிளகாய், தக்காளி துண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
  • ஒரு நீளமான குச்சியில் வெண்ணெய் தடவி குடைமிளகாய், பன்னீர், தக்காளி, பன்னீர், தக்காளி, பன்னீர், குடைமிளகாய் என ஒவ்வொன்றாக குத்தி வைத்து கொள்ளவும்.
  • பின் தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான பன்னீர் டிக்கா தயார். இதை தக்காளி சாசுடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 18g | Sodium: 18mg | Potassium: 71mg | Vitamin C: 25mg | Calcium: 407mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!