Home சைவம் ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி...

ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

பஞ்சாபி ஸ்டைல் அப்படின்னு சொன்னாலே அங்கு ரொம்ப ரொம்ப ஃபேமஸான உணவுகள் அப்படின்னு பார்த்தோம்னா அவங்க வைக்கிற சப்பாத்தி, நாண் மற்றும் அதற்கான கிரேவிகள் தான். பஞ்சாபி ஸ்டைலில் சப்பாத்தி, நாண், பரோட்டா அதுக்கான கிரேவி சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். அவங்க சமையல்ல அதிகம் கோதுமை சேர்த்துப்பாங்க.

-விளம்பரம்-

அப்படி அவங்க செய்ற உணவுகள் எல்லாமே ரொம்பவே ருசியான உணவுகளா இருக்கும்.நாம இப்ப கூட எங்க பஞ்சாபி தாபாக்கள் எங்கே இருக்கு சாப்பிடுவதற்கு அப்படின்னு தேடி போயிட்டு தான் இருக்கோம். அப்படி பஞ்சாபி ஸ்டைல ரொம்பவே சுவையான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம் .

இந்த பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவிய நீங்க சப்பாத்தி, நாண், பூரி, தோசை, இட்லிக்கு கூட சேர்த்து சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இப்படி சுவையான பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமாக செய்யறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கோம். பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் அப்படின்னாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அப்படி பஞ்சாபி ஸ்டைல் உணவுகளை விரும்புவர்களுக்கு இந்த பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு இப்ப பார்க்கலாம்.

Print
4.34 from 3 votes

பஞ்சாபி பன்னீர் பட்டாணி கிரேவி | Punjabi Peas Gravy Recipe In Tamil

பன்னீர் பச்சைபட்டாணி கிரேவி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியநீங்க சப்பாத்தி, நாண், பூரி, தோசை, இட்லிக்கு கூட சேர்த்து சாப்பிட ரொம்பவே சுவையாஇருக்கும். இப்படி சுவையான பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமாகசெய்யறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கோம். பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் அப்படின்னாலேஎல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அப்படி பஞ்சாபி ஸ்டைல் உணவுகளை விரும்புவர்களுக்குஇந்த பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு இப்பபார்க்கலாம்.
Prep Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: punjabi
Keyword: Punjabi Paneer Peas Gravy
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பன்னீர்
  • 2 கப் பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் வெண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் எலுமிச்சைபழம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  பிறகு அதில் கொத்தமல்லி தழைகள், பட்டாணி சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும்.இறுதியாக அதில் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிஆற வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள ஆறிய பொருட்களை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள விழுதை சேர்த்து லேசாக வதக்கி விட வேண்டும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா , மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பிறகுமல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துநன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  • நன்றாக ஒரு கொதி வந்த பிறகு பன்னீரை கையால் உதிர்த்து விட்டோ அல்லது துண்டுகளாகவும் நறுக்கி இந்த கிரேவியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். நன்றாக கொதித்து பிறகு சூடாக பரிமாறினால். சுவையான பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி தயார்.

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட காலிப்ளவர் பட்டாணி பன்னீர் மசாலா இப்படி செய்து பாருங்க! கூட்டுனா இதான் கூட்டு என்ன சுவை!