சுட சுட சோறுடன் சாப்பிட காலிப்ளவர் பட்டாணி பன்னீர் மசாலா இப்படி செய்து பாருங்க! கூட்டுனா இதான் கூட்டு என்ன சுவை!

- Advertisement -

அசைவ சமையலை மிஞ்சும் ஸ்பைசி காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா!!!வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். காலிஃப்ளவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எப்படி செய்தாலும் அசைவ சமையலை மிஞ்சும் அளவிற்கு ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காலிப்ளவர் ப்ரை மொறு மொறுன்னு இப்படி செய்து பாருங்க இதன் சுையே தனி தான்!

- Advertisement -

சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். மசாலா வாசத்துடன் அருமையான காலிஃப்ளவர் ரெசிபி இதோ உங்களுக்காக.

Print
1 from 1 vote

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா | Cauliflower Paneer Pattani Masala Recipe in Tamil

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். காலிஃப்ளவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எப்படி செய்தாலும் அசைவ சமையலை மிஞ்சும் அளவிற்கு ருசியாக இருக்கும். சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Cauliflower, காலிஃபிளவர்
Yield: 4 People
Calories: 318kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 காலிப்ளவர் சிறியது
  • 2 கப் பட்டாணி
  • 1 tbsp சோம்பு
  • 2 tbsp எண்ணெய்
  • 1 பட்டை
  • 4 கிராம்பு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 1/4 கப் தக்காளி சாஸ்
  • 1 கப் பன்னீர்

மசாலா அரைத்துக்கொள்ள:

  • 2 வெங்காயம்
  • 2 tbsp மிளகாய்த்தூள்
  • 5 பச்சைமிளகாய்
  • 1 சிட்டிகை மஞ்சள் பொடி

செய்முறை

  • வெங்காயம், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.
  • வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.
  • பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 318kcal | Carbohydrates: 30.7g | Protein: 14g | Fat: 6g | Saturated Fat: 0.6g | Trans Fat: 61g | Vitamin C: 59mg