இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

- Advertisement -

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

-விளம்பரம்-

உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மிளகு ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள்.

- Advertisement -

சளி, கபம், தலைவலி, ஜலதோஷம், ஜுரம், உடல் வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் என்று நீங்கள் எந்த வகையில் அவதிப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள், எல்லாம் எங்கு மாயமாகப் போகும் என்றே தெரியாது! எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் உணவுடன் ரசம் எடுத்துக்கொள்ள தவற வேண்டாம். எப்போதும் புளி, தக்காளி சேர்த்து ஒரேபோன்ற ரசம் வைத்து சலித்துவிட்டதா? கவலையே வேண்டாம். பருப்பு, எலுமிச்சை கலவையோடு சுவையான எலுமிச்சை பருப்பு ரசம் ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

Print
No ratings yet

எலுமிச்சை பருப்பு ரசம் | Lemon Dal Rasam Recipe In Tamil

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மிளகு ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Lemon Dal Rasam
Yield: 4 People
Calories: 71kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 டேபிள் ஸ்பூன் ரசப்பொடி
  • 10 சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 3 வர ‌மிளகாய்
  • 2 கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் துவரம் பருப்பை நன்கு அலசி குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பிறகு ரசப்பொடி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து கலந்து விடவும்.
  • ரசம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ரசம் சூடு ஆறியவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான எலுமிச்சை பருப்பு ரசம் தயார். சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 71kcal | Carbohydrates: 5.4g | Protein: 6.2g | Fat: 2g | Sodium: 26mg | Potassium: 138mg | Vitamin A: 15IU | Vitamin C: 53mg | Calcium: 26mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு பூண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!