தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பொங்கல் இப்படி செய்து பாருங்க! வீட்டில் உள்ள அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள்!
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக கடைகளில் இருந்து வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய இனிப்புகள் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக கடைகளில் இருந்து வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய இனிப்புகள் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலருக்கு இனிப்புகள் மேல் அவ்வளவு காதல் இருக்கும். என்னதான் கோவில்களில் நிறைய பிரசாதங்கள் கொடுத்தாலும் பொங்கல் பிரசாதம் மிகவும் ஸ்பெஷல் ஆனது.
அவ்வளவு ருசியாக இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் சாப்பிட முடியும் அந்த அளவிற்கு அதனுடைய ருசியை வர்ணித்து கொண்டே இருக்கலாம். வீட்டில் விசேஷங்கள் என்று சாமிக்கு படைக்க இந்த பொங்கல் பிரசாதத்தையும் செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் பொங்கல் பண்டிகை என்று பொங்கல் சாப்பிடுவதற்காகவே அந்த பொங்கல் பானைக்கு அருகில் அமர்ந்திருப்பவர்கள் நிறைய பேர். அந்த அளவிற்கு இந்த பொங்கலின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.
அதிலும் நாம் இன்று கருப்பட்டி வைத்து கருப்பட்டி பொங்கல் செய்யப் போகிறோம். பொதுவாக கருப்பட்டியில் எண்ணற்ற நன்மைகள் உண்டு என்பார்கள். கருப்பட்டியை நாம் சாப்பிட்டு வந்தால் பசி எடுக்காதவர்களுக்கு நன்றாக பசியை தூண்டும், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சுத்தம் செய்து ரத்தத்தையும் சுத்திகரிக்கும், அதுமட்டுமில்லாமல் முகங்கள் பளபளப்பாகும்.
இப்படி என்ன சொன்ன நன்மைகள் உள்ள இந்த கருப்பட்டியில் பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை விரும்பியும் சாப்பிடுவார்கள் அதே நேரத்தில் ஆரோக்கியமானதும் கூட. இந்த அருமையான கருப்பட்டி பொங்கல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்